பக்கங்கள்

பக்கங்கள்

வியாழன், 31 ஜூலை, 2014

சொர்க்கம், ஆத்மா! பல்லிராசி சோதிடம்!யாவும்...

சொடுக்கு [URL]:
https://plus.google.com/u/0/app/basic/stream/

பாவவிதி, புண்ணியம்பேய்!
பல்லிராசி... சோதிடம்!

சாபம், பிறந்தநாள்,
தானவிழா... சாதிகள்!

காவுப்பரி காரம் கடவுள்...
மதம்பூசை...

தேவருல கம்நரகம்,
தீண்டாமை...
சொர்க்கம்ஆத்மா!

(இவை)                                            யாவும் திருடர்கே...
(வேற்றுமைக்கும்!) ஆம்!!

மானுடசமூகத்தைப் பிரித்து மகிழ்வார்...

சொடுக்கு :
https://plus.google.com/u/0/app/basic/stream/

மெய்ப் பொருள்:

மானுடசமூகத்தை உயர்குடி தாழ்ந்த
பிறவியர் என்றுப் பிரித்து மகிழ்வார்
தலையில் இருந்து விலகும் மயிர்... ஒப்பர்!


திங்கள், 28 ஜூலை, 2014

பேதங்கள் நிறைந்த, பிரபஞ்சத்திற்குள்...


View photo [Click > URL]:
https://plus.google.com/u/0/app/basic/stream/

பேதங்கள் நிறைந்த, பிரபஞ்சத்திற்குள்...
காதல் நட்சத்திரங்கள்!

மோதல்கள் நிகழ்கின்றன!
வெடித்துச் சிதறுகின்றன!
அன்புத் துகள்கள்...
நெபூலா!

திங்கள், 14 ஜூலை, 2014

என் கவிதைப் பிரளயமே!

View verse photo [Click > URL]:
https://plus.google.com/u/0/


என்-
கவிதைப் பிரளயமே!

ஒளியின் வேகமோ...
நிமிடத்திற்கு,
ஒரு லட்சத்து
எண்பத் தாராயிரத்து
இருநூற்று
எண்பத்து ரெண்டு
புள்ளி
முன்னூற்று
தொன்னூற்றேழு
(1,86,282.397)
மைல்களாம்!

அம்ம...!
என்னை ஊடுருவி
நோக்கும் உன்றன்
பார்வையின்
பாய்ச்சலோ –
பாய்ச்சலின் வேகமோ...
அது, அறிவியல் –
ஒளிவேகக்
கருவி கொண்டும்,
அளந்து...
நிர்ணயிக்க இயலாது!

ஒரு அனுமானமே!
பல நூறாயிரம்
ஒளி ஆண்டுகள்!
(ஒரு ஒளி ஆண்டு
பல நூறாயிரம் - 5.88
மில்லியன் மில்லியன்
மைல்களாம்???)


என் –
காதல் புவனமே!

உலகம்...
உருண்டையானதுதான்
உன்னை –
சந்தித்த பிறகே...
அதில் எனக்கு
நம்பிக்கை வந்தது!
நானும்... நிலா ஆனேன்!

Read more [Click > URL]:
http://willsindiaswillsword.blogspot.in/2013/03/blog-post.html?m=1

ஞாயிறு, 13 ஜூலை, 2014

இளைய ராசாவின் இசையோ?

(எழில் எனப்படுவது...)

View photo [Click > URL]:
https://plus.google.com/u/0/app/basic/stream/VijayAwards/

இளைய ராசாவின் இசையோ?
இசைக்கும் தேனீக்கள்...
மொழியோ?
மொழியில் 'சொல்'ஆடும் தமிழோ?
தமிழில் தள்ளாடும் மதுவோ?

மதுவைச் சுரந்தாடும் மலரோ?

மலரில் இதழாடும் கலையோ?
கலையைக் கவர்தாடும் முகிலோ?
முகிலைக் கண்டாடும் மயிலோ?

மயிலைநனைத்தாடும் மழையோ?

மழையில் மகிழ்ந்தாடும் வயலோ?
வயலில் வந்தாடும் மீனோ?
மீனைப் போலாடும் விழியோ?

விழியில் விழித்தாடும் கனவோ?

கனவில் நின்றாடும் நினைவோ?
நினைவில் நெளிந்தாடும்...
இரவோ?
இரவில் எழுந்தாடும் ஒளியோ?

ஒளியில் அசைந்தாடும்...

கொடியோ?
கொடியில் உருண்டாடும் பனியோ?
பனியில் குளிர்ந்தாடும் கனியோ?
கனியில் குழையாத சுளையோ?

சுளையைச்  சுவைத்தாடும்...

கிளியோ?
கிளிகள் அமர்ந்தாடும் கீற்றோ?
கீற்றைக் கிழித்தாடும் காற்றோ?
காற்றும் காணாத நிலவோ?

நிலவைப் பார்த்தாடும் வனமோ?

வனத்தில் வண்டாடும் ஒலியோ?
ஒலியில் உணர்வாடும் தமிழோ? எழில்...
`தமிழே' என்றாடும் இடமே!


வெள்ளி, 11 ஜூலை, 2014

ஆண்டவன் எங்கே இருந்து  வந்துற்றானாம்?

Read story [Click > URL]:
https://plus.google.com/u/0/app/basic/stream/

மானுடம் எங்கே இருந்து வந்துற்றது?
பூமியில் தேர்ந்த கரு அணுக்கள்...
பிளவுப்பட வெளிப்பட்டது!
தேர்ந்த  கரு அணுக்கள்  எங்கிருந்து வந்துற்றன?
தண்ணீரில் இருந்து தோன்றிட்டன!

தண்ணீர் எங்கே இருந்து வந்துற்றது?
காற்றில் இருந்து வந்தது!
காற்று எங்கிருந்து வந்துற்றது?
பூமி சுழல நெருப்பு மலைகளின் வெப்ப ஆவிகள் குளிர பிரிந்திட்டது!

பூமி எங்கே இருந்து வந்தது?
தினகரனில் இருந்து பிய்ந்தது!
நிலவு, எங்கே இருந்து வந்தது?
நிலவும் சூரியனில் இருந்து
பிரிந்தது!
சூரியன்  எங்கிருந்து வந்துற்றது?
பிரபஞ்ச பெருவெடிப்பில் திரண்டு
தெரித்தது!

ஆண்டவன் எங்கே இருந்து
வந்துற்றானாம்?
பொய் பேசும் மானுட மனம்
கற்ப்பித்திட்டது!

மானுட மனங்களுக்குள் பொய் எங்கிருந்து வந்துற்றது?
அவாள்  மண்டை ஓடுகளுள்;
மூளை கற்பனைப் புதர்களில்...
இருந்து வளர்ந்திட்டது!

                    [2]

[காதலால் இசைந்ததும், காமத்தால் கலந்ததும்...]

என்னை  உன்னை எவனையும்
இறைவன் படைக்க வில்லையே!
பின்னை எவன்ப டைப்பிலே பிறப்பெ டுத்தோம் மண்ணிலே,
அன்னைத் தந்தை கலவியில், அவத ரித்தோம் பெண்ணிலே!,
உண்மை இதுதான் என்பவனை உலக மேதை  என்பனே!

உருவெடுத்து [உருவம் தெரிய] நேரடியாய் உயிர்படைத்து ஓர்நொடியில், கொடுத்திருந்தால், கொடுத்தவனை
ஆண்டவனே!என்றிருப்பேன்!
கருத்தரித்துப் பத்துமாதம் [நம்மை] கருவறைக்குள் வைத்திருந்து, (உயிர்ப் பிழைத்து)
உருவெடுத்துப் பெற்றவர்கள், உண்மையிலே நம்அன்னையரே!


உன்னை யார்பெற்றார் என்றால் உடனேநீ அம்மா என்பாய்;
என்னை யார்பெற்றார் என்றால் என்னையும்என் அன்னை என்பேன்;
பின்னைநீ பிதற்றுவ(து) என்ன?தெய்வமே படைத்த(து) என்று! - உன் அன்னையை [நடத்தையை] அவமதிக்கின்றாயே - நீஒரு அப்பனுக்குப் பிறந்தவன் தானே!


தந்தைச் சுரந்த விந்துவழி தாவிஎன்றன் உயிரணு,
அன்னைஅளித்த முட்டைக்கூட்டுள் ஆனந்தமாய் நுழையவே,
சொந்தமாக்கிதன் வயிற்றுள்ளே என் தொந்தரவைத் தாங்கியே,
தந்த(து) என்னைஎன்அன்னையே! ஆண்டவனே இல்லையே!


கூழொக்கும்உன் தந்தை விந்தில் குறுகுறு வெனவே நீந்திய
வாலுள்ள அணுக்களில் ஒன்று (அது உன்னுடையது),
                         வந்த கருமுட்டையைத்*  துளைக்க...
வால்குறுகி கைகால் முளைக்க-நீ பிறக்கும்விதம் பக்குவமாக,
பால்சுரந்துப் பெற்றதுஉன் அன்னை! மூளையே சொல்
கடவுள் இல்லை.

                       ( *கருமுட்டை உன் அன்னையின் உடம்பில் உருவானது. )


லிங்க விந்தில் ஆணணு     லிங்கம் போன வழியிலே,
தங்கி  வந்த முட்டையை (பெண்ணினுடையது)
தாங்கித் தாங்கி நுழையவே,
சங்க மங்க ளானதே!  சங்கமத்தா லானதே!
எங்கள் உங்கள் அங்கமே; சொல்
இயற்கை உந்துதலால்...
யாவும் நிகழ்ந்ததே!
ஆண்டவனால் இல்லையே!


காத  லால்இ  சைந்ததும்  காமத்  தால்க  லந்ததும்,
தாதடா புகுந்ததும்   தானடாபி  றந்ததும்,
ஏதடாக  டவுளும்  எதற்க  டாப்ப  டைக்கனும்,
ஓத டாஇ  றைவென்று ஒருவனும்,  இல்லை என்று...  என்றுமே!


Read more [Click > URL]:
http://m.bbc.com/news/magazine-28039513

இவள் தளிர் நகையின் சுரப்பா? தண்தமிழின் இனிப்பா?





  Photo:  Vijay Television


சந்திரனின் றுருளும் தரணிமகிழ் ஒளியா?

சிந்தனையுள் நிலைத்த தேர்ந்தகவி
சுனையா?

அந்திநிற மும்மயங்கி அதரங்க
ளிடைமுயங்கும்...

தண்தமிழின் இனிப்பா? இவள்
தளிர் நகையின் சுரப்பே!

சந்தனத் தேன்இதழ் சந்தங்கள் சிந்தும்முன்...

  

Photo  Taylor Swift Universe

[Click > URL]:       
https://plus.google.com/u/0/app/basic/stream/

செந்தமிழ் சொற்களைத் தேனென வேதினம்...

சொந்தம் கொண்டேபடித்(து) உண்டாயோ? - தந்தமே!

சந்தனத் தேன்இதழ் சந்தங்கள் சிந்தும்முன்...

முந்துதேவாய் கண்புன் முறுவல்?

அதரம்அவிழ் சிரிப்பா? அழகுமுல்லை திறப்பா?


  Photo: Vijay Television


அலைகடல் அழைப்பா?
அசைநுரைத் தெரிப்பா?

இளமைவன சொலிப்பா? இலை...
கொடியிடை காணும்,

நிலவுஒளி களிப்பா?
நீந்தும்நதி நினைப்பா?

அழகுமுல்லை திறப்பா?இவள் 
அதரம்அவிழ் சிரிப்பே!

வியாழன், 10 ஜூலை, 2014

மயக்கம்தர எதுவோ? உன் புன்முறுவலே!


Photo: Vijay Television




தமிழா? தமிழ்தெளிக்கும்...
சுவையா?
சுவைகொடுக்கும் அமிழ்தா?
அமிழ்தளிக்கும் மணமா?
மணம்சுழற்றும் கொடியா?
கொடி அவிழ்க்கும் மலரா?
மலர்சிதறும் மதுவா?
மயக்கம்தர எதுவோ?
தமிழால்...
முகிழும் உன் புன்முறுவலே!

அன்பு என்பது... கரும்பு போன்றது!


காதல் என்பது... காற்றுப்
போன்றது!
அதனால், பூமி மட்டுமே...
சுவாசிக்கின்றது!

உலகம் நிலைக்கும் வரை,
காற்றும் சுழலுமே!
மானுடம் உள்ளளவும்...
காதல் வாழுமே!

கரியமிளவாயு,
காற்றுள் உள்ளது!
காதலுள்...
ஆக்சிசனைத் துன்புறுத்தும்,
வேற்றுமை...
மனநோய் ஆகிற்று!

வாழ்க்கை என்பது...
ஆக்சிசன் போன்றது!
காற்று, நீர், நெருப்பு,
உயிரிகள்...
அனைத்துக்குமே,
தேவை ஆகிற்று!

உப்பு என்பது உறவு...
ஆயிற்று!
இதில், கரிப்பு என்பது...
புறக்கணிப்பு ஆகிற்று!

அன்பு என்பது...
கரும்பு போன்றது!
அதில் இனிப்பு  என்பது,
அதன் நெருக்கம் ஆனது!

பிரிவு என்பது,
காதலை முறிப்பது!
வாழ்க்கை வயலிலே...
காயும் மணல் ஆவது!