பக்கங்கள்

பக்கங்கள்

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

India was a Buddhist country, not Hindu!

Firstpost
India was a Buddhist country, not Hindu: Maharashtra OBCs plan 'ghar wapsi' from 
Hinduism
கைபர் போலன் கணவாய்கள் வழியாக ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டு சிந்து ஆற்றுப் படுக்கைகளை [பள்ளத்தாக்குகள்  மற்றும் சமவெளிகளை] ஆக்கிர
மிப்பு செய்திட்ட முதலாம் அன்னியர்கள் குதிரைகளை 
கொன்று உண்ணுதல், சோமபானம் அருந்துதல், ஒரு
மனைவி ஐந்து கணவர்களுடன் வாழ்கையைப் பகிர்தல் போன்ற மானுட நாகரிகத்திற்கு முரணான மோசமான பண்புகளை கொண்டிருந்த தன்மையால் பூர்வீக சைவ 
குடி மன்னர்கள்  [இராவணன், இரணியன் போன்றோர் கட்கும் அவர்களின் வழித்தோன்றல்கட்கும்]...

நாட்டைவிட்டு ஆரியர்களை  அப்புறப்படுத்திடும் நிர் பந்தம் கட்டாயமான கடமை ஆயிற்று. இதனால் சிந்து
நதி சமவெளி ஆக்கிரமிப்பாளர்கட்கு சிந்துமடம் என்ற 
அமைப்பு உருவாகிட்ட நெருக்கடியானது அவர்களுடைய [தமிழகத்தின் முத்தமிழ் சங்கங்கள் அன்ன] தேவை யின்பாற்பட்டது எனும்படிக்கு நிலைமை ஆயிற்று.

காலவோட்டத்தில் சிந்து மடம் என்பது  வன்முறை  
போர்பயிற்சிக்கான கூடமாக, ஆனால் தவசாலைகள்  
என்கின்ற  பெயர்களில் போலி  'தர்ம சாலைகளாக'
இயங்கின.  அக்கால கட்டத்தில் பழமை வாதிகளின் 
கடவுள்-மதம் மூடநம்பிக்கைகளை விலகிய பெளத்தம், 
மகாஞானி புத்தரின் முற்போக்கு சிந்தனைகளால் நாடு 
முழுவதுமாக வேகமாகப் பரவியது.

இந்த சந்தர்ப்பத்தை தவறவிடாமல் வஞ்சகமாக 
சிந்துமடம் புத்தரை காணல்நீர் கடவுளின் பத்தாவது அவதாரமாக  பிரகடனப்படுத்தியது. அந்தப்படிக்கு,
பெளத்தம் பரவ/ வெற்றிப்பெற சிந்து மடம்துணை 
நின்றது;  பெளத்தத்துக்கு துணை போனவர்கள் 
பின்னர் பலனாக பெளத்த குருக்கள் ஆகிட்டனர்.

அந்தப்படி பெளத்த சமயகுருக்கள் பெளத்தத்துடன் 
துணை நின்றிட்டது  பிடிக்காத வந்தேறி சிந்துமட 
ஆதிபதிகள், மடங்களில் இருந்து விலகி சைவத்தைத்
தழுவி சங்கரமடங்களாக ஆக்கிவிட்டனர். சிந்துமட 
ஆதிபதிகள்  சைவ மார்க்க குருக்களாக ஆகிட்டது 
பிடிக்காத தமிழ் (சைவ) பற்றாளர்கள் சொந்தம்  
பந்தம் உறவுகளை  விலகி காடுகளில்  சாதி பார்ப
னர்களாக பதுங்கியிருந்து  சமயப்பணி ஆற்றினர்.  

இந்நெருக்கடியால் சைவம் இரண்டுப்பட்டது.  புத்த 
ருடைய முற்போக்கு சிந்தனைகளால் கவரப்பட்டு 
சைவ மார்க்கத்திலிருந்தும் பெரும்பாலோர் பெளத் 
தத்தைத் தழுவினர்.  சைவ மார்க்கதினரிடையே 
ஒற்றுமை சிதறிட்டது.. 

சைவமார்க்கத்தின் நிலைகுலைவுகட்கு... ஆரியர் 
கள் சைவ மதத்தை ஆக்கிரமித்து குருக்கள் ஆக 
தங்களை மாற்றிக்கொள்ள... (முன்பாக) புத்தரைப்
பத்தாவது அவதாரமாக சிந்து மடம் அறிவிதிட்டது    
முக்கிய காரணம் ஆகிற்று;  சாம்ராட் அசோகரின் 
மெளரியப் பேரரசு வீழ்ச்சிக்குப் பின் --

ஆரியர்களின் வருகையை மற்றும் ஆதிக்கத்தை எதிர்த்தவர்களை [இன்று தாழ்த்தப்பட்டவர்கள்/
சூத்திரர்களை] சிந்துமடம் முன்னதாக ஹீன
யாணம் என்று பெளத்தத்தில் தனிமைப்படுதிட்டது. 
பின்னர்  அநேக வன்கொடுமைகள் மூலம் சைவம்
மற்றும் வைணவ மார்கங்களில் சேரும்படி செய்து 
குற்ற அடிமைகளாக்கி அந்தப்படிக்கு பெளத்தம்
வலுவிழக்கும்படி பின்னர்  அதனால் ஹீனயாணம் 
காலப் போக்கில் செயலிழந்து மறைந்துற்றது. 

சிந்துமட ஆதிபதிகளும் அவர்களைப் பின்ப்பற்றிட்ட 
அனுமன் வழித் தோன்றல்களும் [குரங்குப் படை
யினரும்] கடவுளின் அவதாரம் என்று போற்றப்படும்
பன்றிப் பக்தர்களும் மகாயானம் ஆனார்கள்.   ஹீன
யாணம் என்பதானது பலகீன இனம் ஆகிற்று; மக்கட் தொகையில் பெரியதாக இருந்திட்ட மகாயாணம்... 
ஹீனயான பெளத்தர்களை  பல்வேறு உட்கூறு
களாக பிரித்து குற்ற சாதி அடிமைகளாக்கி வேறு
வேறு இடங்கட்கு அனுபிட்டது. 

அந்தப்படிக்கு சிந்து மடம் நடவடிக்கையை  எதிர்த்த 
வர்களை சிறும்பான்மையினர் ஆக்கிட்டது. மக்கள் எண்ணிக்கையில் நூற்றுக்கு மூன்றுப் பேர் என்ற 
நிலையில் அன்று இருந்த முதலாம் அன்னியர்கள் 
[மகாயாண பிரிவினர்] இப்போது அளவில்  பெரிய  
இனம் ஆயிற்று .

இதனிடையே சைவம் மேலும் வலுஇழக்கும்படியாக 
புத்தரை பத்தாவது அவதாரம் என்று பிரகடனப்படுத்தி  அவருடைய நற்புகழை பின்னுக்குத் தள்ளிட்ட சிந்துமட ஆதிபதிகள்,  பிரதான கடவுள் அவதாரமாக, கைபர் 
போலன் கணவாய்கள்  வழி  வந்தோரின் கற்பனை தோன்றலான ராமரை  முன்நிறுத்தினர்.

புத்தரின் சிந்தனைகள் [நாளந்தா பல்கலைக் கழகம்] 
தீக்கிரை ஆக்கப்பட்டது. சிவனை சுடுகாட்டுத் தோட்டி 
ஆக்கினர். ஏழுப்படையானை ஆறுப்படையப்பன் 
எனும்படிக்கு மாற்றினர்.  இந்தியா முழுவதும் ஆங்...
காங்கே  இருந்த பெளத்த மடங்களைத் தகர்த்து 
அவற்றின் மீது வைணவ மடங்களையோ சைவ கோயில்களையோ நிறுவப்பட காரணமாயினர். 

இதனால் சிந்து மடத்திலிருந்து விலகி சைவத்தைத் 
தழுவிட்ட ஆரியர்கள் ஆர்வத்துடன் திரும்பி சிந்து
மட ஆதிபதிகள் முன்னிலையில் வைணவத்துள் 
இணைந்தனர்.  இப்போது சிந்துமடத்துள் பெளத்தம்  
மறைந்து, முற்றும் முதலாம் அந்நியர்களின் [வந்தேறி ஆரியர்களின்] ஆதிக்கத்தின்கீழ் கொள்கைகளால் மாறுபட்டாலும் வைணவமும் சைவமும் தாழ்த்தப்
பட்டவர்கள்  எந்த மதப்பிடியில் இருந்தாலும் ஒன்று 
சேர்ந்து விடாமல் அடிமைகளாகவே இருந்திடும் 
படிக்கு சாதிகளுக்குள்  உட்பிரிவுகளை ஏற்படுத்தி   
தீவிரமாக்கின. 

பெளதத்தால் பாதிக்கப் பட்ட சைவத்துள் உட்பூசல் 
நிகழ்ந் துள்ளது;  சைவ மதத்தில் பெரும்பாண்மை 
யோர் சைவம்விலகி பெளத்தம் தழுவி அசோகர்  
மறைவுக்குப் பின்னர் ஹீனஇனம் ஆனவர்களை 
நிரந்திரமாக  தனிமைப் படுத்திட்ட வைணவ மடஆதி 
பதிகள் தாழ்த்தப் பட்டவர்கள்களை தீண்டத்தகாத 
வர்களாக ஆக்கினர்.

அந்தப்படிக்கு வைணவர்களோடு அடிமை இனங்களை உருவாக்குவதில் சைவர்கள்  கூட்டுச் சேர்த்தனர்.  ஆயி
னும் வைணவ சிந்துமட ஆதிபதிகளும்   சைவமார்க்கத் தினரும் மக்களுள்  தாழ்த்தப்பட்ட பகுதியினருக்கெதிராக தீண்டாமையை கடைப் பிடிப்பது அவர்களை   உழைப்புக் 
கேற்ற ஊதியத்தை தராமல் வறுமையில் தள்ளி கொல் வது  மற்றும் பெள த்தம் மீண்டும் தலை எடுக்காதவாறு 
தடுப்பது போன்ற  மட்டரக மானுட பழமைப் பிற்போக்குத் தனங்களை கடைப்பிடிப்பது  தவிர்த்து... அரசியல் உட்பட
மற்ற எல்லாவற்றிலும்   இன்றுவரை தனித் தனியே எதிரும்புதிருமாய் இயங்குகின்றன.  [அவர்கள் இந்து 
மதம் என்ற அமைப்பில் ஒற்றுமையாக இல்லை.]

அந்தப்படிக்கு, அவ்வப்போது அடிக்கடி வைணவமும் 
சைவமும் மோதிக்கொண்டாலும் பெயரளவுக்கு  இந்து 
மதமாய் நிரந்திரமாக சாதி பேதங்களை காப்பாற்றி ஆதிக்கவெறியில் போலியாய் பெரியமதமாய் 
காட்டிக்கொள்ள மிகவும் சிறிதான ஒரு சாதியின் 
[முதலாம் அந்நிய ஆரிய குருக்களின்] ஆணவ அதி 
காரத்தின்கீழ் குற்றஅடிமைகள் சூத்திர அமைப்புக்கள்
இருந்து வருகின்றன.

இதற்கு  கைபர் போலன் கணவாய்கள் வழிவந்த அந்நிய
வழி தோன்றல்களின் ஆதரவாளர்களையும்  பன்றிப் பக்தர்களாய் குரங்குகளாய் ஒன்றுப்படுத்தி  எருக்கன் 
பூக்களை இணைக்கும் நாராய் 'இந்துமதம்' என்றுப் 
பேரிட்ட ஆரியக் கூத்தர்களின் கட்டமைப்பு [பேதக்கிறுக் கர்களின் சிந்துமடமும் ஆரிய குருக்க ளின் அதிகாரத்தில் சைவமார்கத்தினரும்] அவசியம் என்பதாக கருதுகின்றன. 

அவர்கள் சாதி ஆரியக் கூட்டமைப்பை வலுப்படுத்திட 
ஆண்டு தோறும் இந்தியப் பொருளாதாரத்தை மிகுந்த 
அளவில்  வீணடிக்கும் தீபாவளி  உட்பட மற்ற பேத 
விழாக்கள் போதாதென்று போலியாக கடவுள்களுக் 
கும் கடவுளட்சிகட்கும்  பொம்மை ஊழல் கல்யாணங் 
களையும் பொய்யாக நடத்தி விளையாட்டு பிள்ளைகள் 
அன்ன ஆனந்தப்படுகின்றனர்.

மவுரிய பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர்தான் இந்தியாவில் மக்கள் இஸ்லாமியர்களாக மற்றும் கிருஸ்தவர்களும் மதமாற்றதில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டனர். 
மவுரிய பேரரசின் வீழ்ச்சிக்கு முன்பாக பெளதத்த மதம்தான் இந்தியா முழுவதும் பரவி இருந்தது சிந்துமட ஆதிபதிகள் பெளதத்தத்தை சிந்து  மடம் விலகி தழுவிட்ட நிலைமை
யால் இந்து மதம் என்று இன்று குறிப்பிடும் வைணவம்/
சைவம் மார்க்கங்களின் கூடமைப்பு அன்று இருந்திட
வில்லை.

மவுரிய பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் துருக்கி பேரரசுகளின் படையெடுப்பு  இந்தியாவில் தொடர்ந்து  நிகழ்ந்திட்டன. 
துருக்கி பேரரசுகளின் படையெடுப்புக்குப் பின்னர் இந்தி
யாவில் அடிமை வம்சத்தவர் [இன்று தாழ்த்தப் பட்டவர்ளின் முன்னோர்கள் [மூதாதையர்கள் ] முஸ்லிம்களாக மதம்மாறி எழுபத்தைந்து வருடங்கள் தொடர்ந்து  இந்திய மண்ணை ஆண்டிருக்கின்றனர். அவர்களின் ஆட்சிகாலத்தில் பெளத்தம் மீண்டும் பாரதத்தில் இருந்து கடல்தாண்டி பெரிய அளவில் வளர்ந்துள்ளது. 

அடிமை வம்ச ஆட்சியாளர்கள் யாரும் மக்களில் ஒரு வரை 
யும் மதம்மாறும்படி துன்புறுத்தவோ அன்பளிப்ப ஏதும் அளித்திடவோ இல்லை என்பது வரலாறு. அதனால் இந்துமதத்துள் இருந்திடும் பேத அநீதிகள்/ வன்கொடு
மைகள் காரணமாகவே மத மாற்றங்கள் அவ்வப்போது 
அதுவும் குப்த மன்னர்கள் ஆட்சிகாலம் முதற் கொண்டே நிகழ்துற்றன என்பது அறிவுடையோரால் ஒப்புக்கொள்ள முடியும்.

தவிர புத்தர்தான் கடவுளின் கடைசி [பத்தாவது] அவதாரம் என்பதாக இந்துக்களே பறைகிறபோது;  அதிலும் புத்தரோ அவருடைய மூதாதையர்களில் எவருமோ கைபர் போலன் கணவாய்கள் வழியாக இமயமலை மீது ஏறி வானத்தில் 
இருந்து இறங்கி சிந்து சமவெளியை அத்துமீறி ஆக்கிர
மிப்புச் செய்திடவில்லை. புத்தர் பாரத மண்ணின் மைந்தர். 

அதனால் இந்தியாவை 'பெளதத்தம்'[நாடு] என்பதாக 
அறிவிப்புச் செய்யப்படுமானால் அது மானுட நியாத் தின்பாற்பட்டது.  இது நிறைவேறுமானால் அனைவரும் மண்ணின் மைந்தர்களாய் ஒரே மானுட சாதியாய் மக்கள் அன்பில் ஒன்றிட வேண்டும் என்று விரும்புகின்ற நாட்டுப் பற்றுடைய எவரும் மகிழவே செய்வர்.