பக்கங்கள்

பக்கங்கள்

செவ்வாய், 29 ஏப்ரல், 2014

வகுப்பு மனநோயனே! சொல் நீ நல்லவனா?

சொல் நீ நல்லவனா?
நீ சொல்லும் ஆண்டவன்தான்,
யாவும் படைத்ததாக;
நீ நம்புவது,
உண்மையே என்றால்...

கடவுளை உண்டென்று,
சொல்கின்ற நீ;
நல்லவனாக இருந்திடனுமே! நல்லவன் தானா?
சொல் நீ நல்லவனா?

சொல் நீ...
நல்லவனே என்றால்,
எப்படி நீ நல்லவன்!
என்ன  விதமாய்...
அல்லது எந்த விதத்தில்,
சொல் நீ நல்லவன்?

நல்லவன் போல்
பேசுகின்றாய்!
ஆனால் நல்லவனாக...
இருக்கவில்லையே!

நீ சொல்லும் அரசியலில்,
நேர்மையே இல்லையே!
நியாயமே இல்லையே!
மனித நேயமும் இல்லையே!

எந்த கடவுளும்...
பாரதத்தில்,
மானுடத்தைச் சிதைக்கும்,
உன்னுடைய செயலை;
தடுக்க இல்லையே!

அதனாற்றான்,
நான் சொல்கின்றேன்...
வகுப்புபேத மனநோயனே!
கடவுள் இல்லவே இல்லையே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக