பக்கங்கள்

பக்கங்கள்

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

ஓ! மானுடமே  பூமி, நிலவு, சூரியன் எதுவும்  ஒருவருக்கும்  உரிமைப்பட்டதல்ல 


Public
Jun 10, 13:08
பூமி மனிதனுக்குச் சொந்தமல்ல … மனிதன் தான் பூமிக்குச் சொந்தம் !

கி.பி.1851 இல் ஃபிராங்க்ளின் பியர்ஸ் என்ற அமெரிக்க அதிபர், சுக்வாமிஷ் என்ற செவ்விந்திய இன மக்களுக்குச் சொந்தமான 20 லட்சம் ஏக்கர் நிலத்தை விலைக்குக் கேட்டார். அதற்குப் பதிலளித்து அந்தக் குழுவின் தலைவர் சியாட்டில் அமெரிக்க அதிபருக்கு எழுதியதாகக் கூறப்படும் பிரபலமான கடிதம் இது. ஐரோப்பாவில் கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை முதலாளித்துவத்தை உலுக்கிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் முதலாளித்துவத்தைச் சகிக்க வொண்ணாத பண்டைப் பொதுவுடைமையின் குரலாய் இது ஒலிக்கிறது. அறிவியல் பூர்வமான பொதுவுடைமை, முதலாளித்துவத்திற்கு சாவுமணி அடிக்கத் தொடங்கிய அதே வேளையில், மனித குலத்தின் மழலை முதலாளித்துவத்தின் முகத்தில் காறி உமிழ்கிறது. உலக முதலாளித்துவத்தின் முகத்தில் அந்த எச்சில் இன்னும் வழிந்து கொண்டிருக்கிறது.

(மேலும்)
ஓ! மானுடமே!

இந்த..
பூமி, நிலவு, சூரியன்,
பிரபஞ்சம் எதுவும்,
எள்முனை அளவும்;
தனிப்பட ஒருவருக்கும்,
உரிமைப்பட்டதல்ல!

அனைவருமே,
 படைப்புக்கள்தான் என்று;
அறிவியலுக்கு மாறாக,
உன் பிறப்பை...
[பெற்ற உன் அன்னையை]
நாளும்
அவமதிப்புச் செய்திடும்;

யாருக்கோப் பிறந்திட்ட
எவனோ ஒருவன்,
உன்னை எப்போதுமே
அவனுக்கு,
அடிமையாய் வைத்திட
ஓதிடுவது போன்று;

இறைவன் என்பவனாலும்,
ஆனததல்ல;
இயற்கை வழங்கிட்டது!

என் அறிவே!
உன் பெற்றோர்,
அன்பு மிகுதியால்;
காதலில்...
கூ சாமல் புரிந்திட்ட,
செயலால்...
நீயோ, ஓசியில் பிறந்தவன்!

பிறகு எப்படி
மண், பொன், ஆடு,
மாடுகள் அன்ன;
பெண் உட்பட யாவும்,
உன்னுடைய உடமையே...
என்பது போல் இறுதியானது!

நீ சார்ந்த உன் நாட்டு
அரசியலமைப்பு,
நடைமுறைகள் சாசனமாக;
நீ பிறந்திடுவதற்கு,
முன்பாகவே... மதம் உட்பட,
பொதுவில் அறிவித்திட்டது!

இறுதியாக ஒன்று...
இயற்கையின் சுழற்சிக்குள்,
ஒசியாகப் பிறந்து,
உன்னோடு உறவாடும்;

உன் உடல் இயக்கம் (உயிர் ),
நீ மயங்கிட்ட...
காதலையும் கவர்ந்து;
ஓர் நாள், உடலம் விலகும்!

நீ கற்பனை செய்த,
கடவுளும் உன்னோடு;
இல்லவே இல்லை,
என்பதால்...
உயிரும் நிரந்திரம் அல்ல!


Read more:
லேபிள்கள்: N
 [Click > URL]:
http://willswordstamil.blogspot.in/2014/07/blog-post_41.html?m=1



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக