அரியின் அரியை அரிப்பெற்
றொளிர...
அரியின் அரியை அரிப்பெற்று
மிளிர...
அரிமேல் இருக்கும் அரியின்
மனமோ...
அரியுண்ட அரியாய்மாற; அரியின் ஓரம்...
அரிஅரி அரிகள் இசைஎழப்
பாடும்...
அரிகளும் அரியாய் நாணி
அதில் ஆடும்...
விளக்கம்:
சூரியனின் ஒளியை,
சந்திரன் பெற்றொளிர...
சந்திரனின் ஒளியை,
ஆறு பெற்று மிளிர...
கட்டில்மேல் இருக்கும்,
அரசனின் மனமோ...
கள்உண்ட வண்டாய்,
மாற; சோலை ஓரம்...
அழகான வரிவண்டுகள்,
இசைஎழப் பாடும்;
நெற்பயிர்கள் எழிலாய்,
அதில் ஆடும்!
குறிப்பு:
'அரி' என்ற சொல்லுக்கு
முறையே தமிழில் -
சூரியன், ஒளி, சந்திரன், ஆறு,
கட்டில், அரசன், கள்(ளு),
சோலை, அழகு, வரி, வண்டு
நதி, நெற்கதிர், இவை யாவும்
பொருளாம்.
றொளிர...
அரியின் அரியை அரிப்பெற்று
மிளிர...
அரிமேல் இருக்கும் அரியின்
மனமோ...
அரியுண்ட அரியாய்மாற; அரியின் ஓரம்...
அரிஅரி அரிகள் இசைஎழப்
பாடும்...
அரிகளும் அரியாய் நாணி
அதில் ஆடும்...
விளக்கம்:
சூரியனின் ஒளியை,
சந்திரன் பெற்றொளிர...
சந்திரனின் ஒளியை,
ஆறு பெற்று மிளிர...
கட்டில்மேல் இருக்கும்,
அரசனின் மனமோ...
கள்உண்ட வண்டாய்,
மாற; சோலை ஓரம்...
அழகான வரிவண்டுகள்,
இசைஎழப் பாடும்;
நெற்பயிர்கள் எழிலாய்,
அதில் ஆடும்!
குறிப்பு:
'அரி' என்ற சொல்லுக்கு
முறையே தமிழில் -
சூரியன், ஒளி, சந்திரன், ஆறு,
கட்டில், அரசன், கள்(ளு),
சோலை, அழகு, வரி, வண்டு
நதி, நெற்கதிர், இவை யாவும்
பொருளாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக