வியாழன், 4 செப்டம்பர், 2014

மதவேற்றுமை விலகு, சொர்க்கம் இதுவே எனஆடும் இன்பம்!.

https://plus.google.com/u/0/app/basic/stream/z133vxnqkqvxzl0in04cdxpqjqjpunlgah0?cbp=1an7ydypgw5j7&sview=2&cid=5&so


செத்தபின் சொர்க்கமாம்! செத்து...
மறைந்துஎவன்,
பார்த்ததாய் மீண்டுப் பறைந்தான்?

சுகவாழ்வு வாழ்ந்தாயோ சொர்க்கம்!
துயரம்...
அகத்தைச் சிதைத்தால் அதுநரகம்!
என்றும்...
திகிலேதும் இல்லாது இருந்தாலோ, மோட்சம்!
அகிலம் அளித்தவாறே யாவும்!

உயிரோடு இருக்கையிலே, உண்ணவழி இன்றி;
வயிறோ பசிநோயால், வாடித்
துயருர...
சுற்றம்  சுகம்இல், சுரணைஇல்;
சொர்க்கமாம்...
செத்தபின் செப்புசுடு காடே!

செத்தபின் சொர்க்கம்,
திரண்டு உருண்டுஎன்மேல்;
நித்தம்  சுகம்தந்து,
நீவாமல் மக்கட்டும்!
இத்தரையில் அன்றாடம்,
ஏய்க்கும் நரகங்கள்...
செத்தாலே தப்பாமல்;
செப்புகின்ற சொர்க்கத்தை...
நித்திரை நிம்மதியில் காண்பேன்!

சமநீதி கொல்லும் சதியோர்...
மனமும்,
நிதம்மனிதன்  சாகும்  நிலையும்,
நரகம்!
மதவேற்று மைவிலகு ஒன்றுகாண்
சொர்க்கம்
இதுவே எனஆடும் இன்பம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக