பக்கங்கள்

பக்கங்கள்

திங்கள், 14 ஏப்ரல், 2014

நான் நிலவுக்குச் செல்ல வேண்டும்

நான் நிலவுக்கு, செல்லவேண்டும்!
எதற்கு?
அங்கே வில்ஸ் வேர்ட்ஸ் எம்
ஒற்றுமை...
உலகம் காண வேண்டும்!

ஏன் நாம் ஒற்றுமையை;
இந்த மண்மீது...
பார்க்க முடியாதா?

இங்குதான்,  சாதிமனோ...
சண்டை வியாதிகளும்,
மத... பேதம் ஓதும்,
மானுட கிருமிகளுகம்;
திருந்தாமல் அலைகின்றனவே!
நான் நிலவுக்குக் கீழிருக்கும்
நிலாவைக் காண வேண்டும்!
கீழிருக்கும் நிலாவா?

அது உன் முகம்தான்!
என்னை நீ நோக்க,
எப்போதும் [உன்னை]
நான் பார்க்க வேண்டும்!

நான் செவ்வாய்க்குச்  செல்ல...
வேண்டும்!
செல்!
அங்கே நீ , என்னோடு;
கூடவர வேண்டும்!

நான் உன் வாய் இதழ்களை, பார்த்தாலே போதும்!
அந்தச் செவ்வாயுள்...
புகுந்த களிப்புத் தோன்றும்!

நான் -
உலகம் புகழ்...டென்சிங்
பெயர் எடுக்க,
எவரெஸ்ட் சிகரம்
காண வேண்டும்!

நீ டென்சிங் ஆகிடலாம்...
பின்ஓர்  நாள் - இப்போது
உன் அகம்  முகம் மூடி
என் ஆவலை...
அதிகரிக்க வேண்டாம்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக