பக்கங்கள்

பக்கங்கள்

திங்கள், 21 ஏப்ரல், 2014

படைத்தவன் ஆகாயத்தில் என்றான்!

படைத்தவன் எங்கேயாம்?
ஆகாயத்தில் என்றான்!
தான் பிறந்ததும், ஆகாயத்தில்;
என்றான்!

சொர்க்கம் எங்கேயாம்?
ஆகாயத்தில் என்றான்!
நரகமும்... நேரில் கண்டு;
திரும்பிட்டாற் போல்,
ஆகாயத்தில் என்றான்!

ஆனால், பேய்பிசாசுகள்;
பூமியில்தான் என்றான்!
குரங்குகள்தான் மனிதர்கள்
என்கின்ற...

அறிவியல் உண்மைக்கு;
முரணாக...
மனிதர்களை, குரங்குகள்;
என்றான்!

சாவதை சிவலோக...
பதவியாக, ஓதுகிறான்!
செத்தால்... பேயும்,
பிசாசுகளும், மனிதர்களே;
என்றான்!

என்ன ஊழல் இது?
அறிவியலை முடமாக்கி,
மூளையை...
குப்பைப் பேருந்து ஆக்கிடும்;
முரண்ப்பாடு!

மேலும், அவன் பிறந்தது;
நெற்றியில் [முகத்தில்]
என்றான்!
அந்தப்படிக்கு ஒரு...
ஆணுக்கும் பெண்ணுக்கும்,
அவன் பிறக்கவில்லை;
என்றான்!

அதனால் அவன்தான்
மானுடத்தில், உயர்ந்த சாதி;
என்றான்!

இப்படி... பாரதத்தில்,
மண்ணின் மைந்தரிடையே
பேதங்கள் ஓதி...
கடவுள் பூசைகள் என்று,
மூன்று வேளையும்;
உண்டான்!

இன்று   ஆட்சியைப் பிடிக்க,
ஓட்டுப்போடும் தகுதிப் பெற்ற,
எமது இந்திய முஸ்லிம்
சகோதரரை; பாகிஸ்தான்...
அனுப்பப் போவதாக;

தெருமுனை களில்,
இந்திய அரசமைப்பு சாசன
சரத்துகட்கு, விரோதமாக,
முரணாக, எதிராக, மாறாக,
மிரட்டுகின்றான்!

சட்டம் தவறுதல்களை,
திருத்திக்கொள்ள;
கால அவகாசம்...
தந்துள்ளது!

அதனால், திருந்திடாத, நிலைமையில்...
இவர் வென்றாலும்,
தகுதிநீக்கம் உண்டு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக