வியாழன், 10 ஜூலை, 2014

அன்பு என்பது... கரும்பு போன்றது!


காதல் என்பது... காற்றுப்
போன்றது!
அதனால், பூமி மட்டுமே...
சுவாசிக்கின்றது!

உலகம் நிலைக்கும் வரை,
காற்றும் சுழலுமே!
மானுடம் உள்ளளவும்...
காதல் வாழுமே!

கரியமிளவாயு,
காற்றுள் உள்ளது!
காதலுள்...
ஆக்சிசனைத் துன்புறுத்தும்,
வேற்றுமை...
மனநோய் ஆகிற்று!

வாழ்க்கை என்பது...
ஆக்சிசன் போன்றது!
காற்று, நீர், நெருப்பு,
உயிரிகள்...
அனைத்துக்குமே,
தேவை ஆகிற்று!

உப்பு என்பது உறவு...
ஆயிற்று!
இதில், கரிப்பு என்பது...
புறக்கணிப்பு ஆகிற்று!

அன்பு என்பது...
கரும்பு போன்றது!
அதில் இனிப்பு  என்பது,
அதன் நெருக்கம் ஆனது!

பிரிவு என்பது,
காதலை முறிப்பது!
வாழ்க்கை வயலிலே...
காயும் மணல் ஆவது!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக