Photo: shreya bhatt
கடவுள்என்பது விசுவஉருவ கற்பனையேஎன்று விலகாமல்,
அடகண்டது தின்றிட ஆலயத்துள் சீரணம் ஆகாமல்;
உடலம் (கொழுப்பு) உருகுதற்கு கோயிலோ, குளமோ,
மடமோ சுற்றிவந்து; மடஆரியன் அதைப்பக்தி என்றான்!
திடமொடு அறிவியலைப் புறக்கணித்துதினம் தெய்வம்,
மடமையில் உண்டெண்றான்; மதியால் ஆயாமலே! - உன்
உடமையாய் மதத்தை நம்பநீ, அவனுக்கு அடிமையானாய்!
அறிவே! போற்று தென்னாடு ஆண்ட நாகன்நந்தன், கம்சன்,
இராவணன், ஏககலைஅவன், (இ)ரண்யன், நரஅசுரன்,
புத்தன்அ சோகன், புகழ்அரசி-ரசியா, ஒளவை,வள்ளுவர்,
சித்தர்,பின் அம்பேத்கர், பெரியார், ஒருசேர சேர்த்து!
அன்று கவிஞர்களும், அரசர்களும்,
வனமுனிவர், அனுமன்குரங்கும்,
இன்றும் மறையாபி சாசுகளும்,
ஏளனமாக தொங்கிடும் கண்திருட்டி
பொம்மைமூல அரக்கரும்,
காடுமலைகளில் அலைந்திட்ட சித்தர்களும்,
நம்முன்னாள் மானுடமே! அவ்வாழையடி
வாழை உறவுகள் போற்று!
தெய்வபுரட்டுகளை விலகிஉன் வாரிசுகள்
சுதந்திரத்தைக் காப்பாற்று!
அன்னியன் சாதிகொள்கை ஆராயா மல்ஏற்று,
பின்பற்றும் நாள்வரை பேசும் சுதந்திரம்,
மண்ணுலே உழைப்போர்க்கு எங்கே? மடமையால்,
கொன்றிடும் பேதவம்ச குற்றமதம் என்றுமே...
நன்குஅறிஉன் நாட்டுக்(கு) எதிரி!
மாயன் மகளாய் மகள்மாயி ஆகியும் (கருமாரி)
பேயாய் உன்னைப் பிரித்தோ துவோர்கும்;
ஓயா பிணிகளெலாம் ஓடநன்மை செய்தாயாம்!
சாயாசதி சாதிகளை மாய்!