பக்கங்கள்

பக்கங்கள்

வெள்ளி, 20 மார்ச், 2015

நீயும் நானும் ஒன்றென ஒன்ற...


  Photo:  Jo Ann Neaves
 
மலை முகடுகள்மீது பனிப்படுக்கை மயங்க
இயற்கை இனிமை!
நிலவும் முகிலும் தழுவி நீங்க...
வானம் இனிமை!
தாரகையர் தரணியை கண்டு ஏங்க
இரவு இனிமை!
நீயும் நானும் ஒன்றென ஒன்ற...
அன்பும் இனிமை!


வனமாய் கனவாய் வளர்ந்தாய் நெஞ்சுள்! - உன்

நினைவு நெருப்பால் கடலுள் மூழ்கி...

மணல்மேல் புரண்டேன் மகிழாப் புழுவாய்!

தினமும் உன்னை கனவுகளுள் கண்டு,

தனிமை தகிக்க பிரிவதோ அன்பு?
என்றன் கங்கையே காவிரிக்கு
வா!
 










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக