Photo: da สุดา
என்ன திமிரிருந்தால் ஈசன்சடை மீதுஏறி,
சின்னவீடு அன்ன சிரித்தபடி கூடுகட்டி;
இன்றும் களித்திருப்பாய் எங்கேஉன் நாகரிகம்?
கங்கையே தெனஇந்தியா கா!
கண்ணன் தஙகச்சியாம் கணவன்சிவன் சடைமுடியுள்,
வெள்ள கோலத்தில் விளையாடும் கங்கையேஉன்,
கள்ளக் கலவிவிட்டு காஞ்சிப்பெண் துயர்களைய...
உள்ளத் தூய்மையுடன் உடன்வா தமிழகமே!
இந்தியா என்பதோ எல்லோர்கும் சொந்தமடி!
கங்கைஉன் பாவம் கழுவிடுவாள் தென்குமரியடி!
எங்கள் காவிரியின் இளநகைகாண் வாஅடி!
சங்கமம் ஆகிநீ தமிழ்மொழியை
கற்றிடடி!
சிங்கமுகனாம் அவன்தங்கை
சீறிஎழும் முன்னேநீ,
கஙகைசம வெளித்தாண்டி காவியோடு கலந்திடடி;
பங்கம் ஆகிடாதே
பாரதம்பெண் நாணம்காநீ;
தஞ்சைக் காவிரிபோல் தமிழகம்தழுவி மகிழடி!
சிவனின் சிரசுவிட்டு 'சிவனே'
எனநீ இறங்கி,
கவலைப் படும்படிக்கு கடலோடு நீஅழியும்;
தவற்றை
இனித்தவிர்ப்பாய் தவழ்ந்திடும் காவிரிப்பெண்,
உவகைப்புரிய நடனமாடு! ஒற்றுமைகா குமரியொடு!
Photo : James Clair Lewis
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக