பூமியை உடைக்க -
மத ஆதிக்க வெறி அன்ன…
கடல் கொந்தளித்திட்டது!
சூறாவளியை கிளப்பிவிட்டு…
பூகம்பம் -
பதுங்கிக்கொண்டது!
வாழ்க்கைப் புயலைக் கடக்க;
பயணிகளின் கப்பல்கள்...
கரையை தொட முற்பட;
எங்கிருந்தோ ஒர் தீப்பிளம்பு...
உலகமே!
உன் முகம் எப்போது...
மடையர்களின் போர்களமாகிற்று?
உன்னை பிளக்க வெளிப்படும் -
மதநிற பேத நச்சு விதைகளை;
உன்னுள் ஊன்றிச் சென்றவன் எவன்?
வெறியர்களே!
காமத்தை விட மோசமானதோ...
உங்கள் கண்களை மறைக்கும்;
மண்ணை அபகரிப்புச் செய்திடும் -
தீவிர வாதம்?
தீவிரவாதிகளே!
நீங்கள் சார்ந்த மதத்திற்கு
ஆதாரம் -
கடவுள் நம்பிக்கைதானே!
உங்கள் கடவுளின் மீதான
நம்பிக்கை
பொய்யானது அல்லவே?
அய்யகோ!
இது என்ன கொடுமை...
தரணி ஒற்றுமைக்கு நீங்கள்
இப்படித்தான் -
தையல் போடுவீர்களோ?
கிராதகர்களே!
பிரஞ்சு நாட்டுக்குள் குண்டுவீசி
கொன்ற 129 உலக உயிர்கள் -
நீங்கள் நம்புகிற…
கடவுளால் தரப்படவில்லையோ?
குண்டு வீச்சுக்குள் அதிர்ந்த -
இளம் தளிர்களே! இந்த வடுக்கள்!
மாறாததல்ல!
உங்கள் முகங்களில் எதற்கு -
சிந்தனை கண்ணீர் சுவடுகள்?
நாளை விழி! இன்று உறங்கு?
இது அறிவிலிகளின் ஆணவ விளைவு!
அன்பைத்தாய் தந்தைக்கும்; ஆசையைத்தா
ரத்திடத்தும்;
பண்பைசேர் நண்பர்கும்; பாடுபடும் உன்னை -
அயலாள் நாம் என்றுரைக்கும்;
ஆணவ-மாய்ப் புக்கும்…
உயிரைஉலக ஒற்றுமைக்கும் தா!
Photo : NDTV