ஞாயிறு, 15 நவம்பர், 2015

வானின்று உதித்திட்டதாய் ஏமாற்றும் அவ்ஊழனிடம்...



 
   பு​கைப்படம்:  Dinakaran Tamil News


இறைவன் ஆரியன் செய்திடும் தவபூசைகட்கு  -
இரங்குவா னாமே!

பறையும்அவன் மந்திரங் கட்கு படைத்தவன்  -

கட்டுப் படுகிறவனாமே!

உரையேன் வானின்று உதித்திட்டதாய்  

ஏமாற்றும் அவ்ஊழனிடம்;

நிறையமழை பெய்திட்டது;  நினைத்ததும்  -

நிற்குமாறு ஓது என்றே!

தீவிரவாதிகளே! 129 உயிர்கள் நீங்கள் நம்புகிற கடவுளால் தரப்படவில்லையோ?



 
  உயி​ரோவியம்:     Elsa Lo Monaco


பூமியை உடைக்க -

மத ஆதிக்க வெறி அன்ன

கடல் கொந்தளித்திட்டது!


சூறாவளியை கிளப்பிவிட்டு

பூகம்பம்
பதுங்கிக்கொண்டது!



வாழ்க்கைப் புயலைக் கடக்க;

பயணிகளின் கப்பல்கள்...

கரையை தொட முற்பட;

எங்கிருந்தோ ஒர் தீப்பிளம்பு...



உலகமே!

உன் முகம் எப்போது...

மடையர்களின் போர்களமாகிற்று?



உன்னை பிளக்க வெளிப்படும் -

மதநிற பேத நச்சு விதைகளை;

உன்னுள் ஊன்றிச் சென்றவன் எவன்?



வெறியர்களே!

காமத்தை விட மோசமானதோ...

உங்கள் கண்களை மறைக்கும்;

மண்ணை அபகரிப்புச் செய்திடும் -

தீவிர வாதம்?



தீவிரவாதிகளே!

நீங்கள் சார்ந்த மதத்திற்கு

ஆதாரம் -

கடவுள் நம்பிக்கைதானே!


உங்கள் கடவுளின் மீதான
நம்பிக்கை
​பொய்யானது அல்லவே?

அய்யகோ!
இது என்ன கொடுமை...
தரணி ஒற்றுமைக்கு நீங்கள்
இப்படித்தான் -
தையல் போடுவீர்களோ?

கிராதகர்களே!
பிரஞ்சு நாட்டுக்குள்  குண்டுவீசி
கொன்ற 129 உலக உயிர்கள் -
நீங்கள் நம்புகிற
கடவுளால் தரப்படவில்லையோ?  

குண்டு வீச்சுக்குள் அதிர்ந்த -
இளம் தளிர்களே! இந்த வடுக்கள்!
மாறாததல்ல!
உங்கள் முகங்களில் எதற்கு -
சிந்தனை கண்ணீர் சுவடுகள்?
நாளை விழி! இன்று உறங்கு?
இது அறிவிலிகளின் ஆணவ விளைவு!

அன்பைத்தாய்  தந்தைக்கும்; ஆசையைத்தா
ரத்திடத்தும்;
பண்பைசேர் நண்பர்கும்; பாடுபடும் உன்னை -
அயலாள் நாம் என்றுரைக்கும்;
ஆணவ-மாய்ப் புக்கும்
உயிரைஉலக  ஒற்றுமைக்கும்  தா!


 
  Photo :  NDTV