புதன், 11 மே, 2016

ஆணும் பெண்ணும் வேணுமே... உருவாக விந்துமுட்டையே!

சூன்யம் என்பது என்ன? வெறுமை! அதாவது….
காற்று உட்பட எதுவும் இல்லாத வெற்றிடம்!
பல்லி சூன்யம் என்றால்…? பள்ளி (கல்வி) சூன்யம்!
பள்ளி சூன்யம் என்பது பின்ஓர்நாளில்...
பில்லி சூன்யம் என்று மாற்றப்பட்டது!
பில்லி பொய்... பேய்என்று , அந்நாளில்​
ஓதுப​றையன் ​செப்ப… அதுஊழல்ஆயிற்று!


கண்ணன்ஓர் கடவுள் என்றால் அவ​​னொரு
க​ணையால் மாண்டிட்ட காரணம் ஏன்?

இராமன் என்பவன் இ​றைவன் என்றால்
ஆற்றில் விழுந்துஉயிர் விட்டது ஏன்?

ஈசன் என்பவன் ​தெய்வம்தான் என்றால்
எங்​கேஅவன் ​சென்றான் விவரம் ப​றைவீர்

உயி​ரைக் ​கொடுத்து உயி​ரை எடுக்கஎம​னாம்!
எம​னைப் ப​டைத்தவன்  ஆண்ட​னோ?

கயி​​றைக் ​​கொடுத்துஅக் கால​னை அனுப்பிட்ட
கடவுள் எவனா னாலும் கற்ப​னை​யே!


ஆணும் பெண்ணும் வேணுமே உருவாக
விந்துமுட்டையே!

பேணபெண் வயிறு வேணுமே பிரசவிக்க
மழலையே!

ஊணும் நீரும் வேணுமே உயிர்வளர
பெண்உடலுளே!

ஆகினாய்உன்  தகப்பனால் ஆராதிக்கின்றாய்
ஏன் வெறுமையை!