புதன், 30 ஏப்ரல், 2014

Readers in Kavithai chittu and their eagerness!


அடியிற் குறிப்பிட்ட கவிதைச்சிட்டு வாசகர்கள்/கவிஞர்களின் முகவரிகள் நவம்பர் 1990-மாத, நிலவரப்படி உள்ளன.கவிதைகள் கவிதைச் சிட்டு நவம்பர் 1990எண்.4ல்
இருந்து மறுபதிப்புச்செய்யப்
படுகின்றன.


கவிதைச்சிட்டின் கருத்துப் பூக்களே! நீங்கள்…
                      --

ஏ!
கண்டதில் மயங்கும்
காகிதபூக்களே!
நீங்கள்...
கண்ணீர் பூக்கள்!

கண்களில் வளரும்...
காதல் பூக்களே!
நீங்கள்...
கண்ணியப் பூக்கள்!

வசந்தத்தில்சிரிக்கும்
மெளன பூக்களே!
நீங்கள்...
வசீகரா பூக்கள்!

இதயம்விரும்பும்
இனிய பூக்களே!
நீங்கள்...
இளமைப் பூக்கள்!

பகட்டுகள்இல்லா
பாசப் பூக்களே!
நீங்கள்...
பண்புப் பூக்கள்!

ஆசைகள்அரும்பாத
அக்கினிப் பூக்களே!
நீங்கள்...
அறியா(மை) பூக்கள்!

வாடியகொடியில்
மலரும் பூக்களே!
நீங்கள்...
பட்டினிப்பூக்கள்!

பருவங்கள் பறிபோன
பனிப் பூக்களே!
நீங்கள்...
பகலில்ஒளிரும்,
தாரகைப் பூக்கள்!

கவிதைச் சிட்டின்
கருத்துப்பூக்களே!
நீங்கள்
காவியப் பூக்கள்!

- ஆ.சுப்பிரமணயன்,
சம்பளக் கணக்குஅலுவலகம்
(கிழக்கு),
சேப்பாக்ககம், சென்னை-5

உழைப்பு!
          இதய மலர்... மலர்ந்தது!
எங்கும் மணம் கவர்ந்தது!
எண்ண வண்டுக்கு...
ஓர் மயக்கம்! அது,
தேன் சிந்துமென்று!
ஆனால் -சிதறியதோ...
செங்கரிய இரத்தம்!

- நித்யானந்தம்
சம்பளக்கணக்கு அலுவலகம்,
சென்னை-5.

மேகம்...

உலகோர் வாழ
ஆகாயம் தொட்டு
ஆவியைச் சிந்தி...
உருக்குலைந்து அழியும்
ஏழைத்தொழிலாளி!

- S.K..பாஸ்கர்
பாக்யலெட்சுமி எண்டர்பிரைசஸ்,
சென்னை-1.





உலக வரைப்படத்தில்...
நாடுகளின் கோடுகளை
அப்புறப்படுத்துங்கள்!
அப்போது-
வருமைக் கோடு[ம்] ..
அழியும்!

- மங்களம் இளம்பரிதி,
தலைமைச் செயலகம்,
சென்னை-9.

தோழனே!
வரலாறுகளை…
நினைத்து வருந்தாதே!
திருத்து! அவை -முதலாளிகளின்
தவறான...
மொழிப் பெயர்ப்பு!

- கோ.மோகன்ராஜ்
இலக்கியஆர்வலர் கழகம்
18, சுந்தரம்4வது தெரு,
வியாசர்பாடி, சென்னை-37.


ஒரு பட்டதாரியின்புலம்பல்!
இருக்கட்டும்...
என் அமுத சுரபி!
வேலைவாய்ப்பு அழைப்பு
அலுவலக அட்டைகளை-
[Interview cards]
ஒருநாள்...
மொத்தமாய்
விலைக்குப் போட்டு
ஒரு அலுவலகத்தையே
விலைக்குவாங்கிட போகின்றேன்!

- மு.இளவரசு,
சம்பளக்கணக்குஅலுவலகம்,
சென்னை-5.

சிறப்புப் பட்டங்கள்!

நான்அப்பாவுக்கு...
தண்டச் சோறு!
அம்மாவுக்கு... தருதலை!
அக்காவுக்கு... தடிமாடு!
தம்பிக்கு... ஊர் பொருக்கி!
ஊராருக்கு... ஊதாரி!
பெயருக்கு... பட்டதாரி!

- ம.நாதன்,
சம்பளக்கணக்கு அலுவலகம்,
சென்னை-5.

எதார்த்தம்!

தக்கைகள் மிதக்கின்றன!
முத்துக்களோ...
மூழ்கி -
அமிழ்கின்றன!
- பாட்டாளிப்பழனியப்பன்,
தலைமைச்செயலகம்,
சென்னை-9.

செவ்வாய், 29 ஏப்ரல், 2014

வகுப்பு மனநோயனே! சொல் நீ நல்லவனா?

சொல் நீ நல்லவனா?
நீ சொல்லும் ஆண்டவன்தான்,
யாவும் படைத்ததாக;
நீ நம்புவது,
உண்மையே என்றால்...

கடவுளை உண்டென்று,
சொல்கின்ற நீ;
நல்லவனாக இருந்திடனுமே! நல்லவன் தானா?
சொல் நீ நல்லவனா?

சொல் நீ...
நல்லவனே என்றால்,
எப்படி நீ நல்லவன்!
என்ன  விதமாய்...
அல்லது எந்த விதத்தில்,
சொல் நீ நல்லவன்?

நல்லவன் போல்
பேசுகின்றாய்!
ஆனால் நல்லவனாக...
இருக்கவில்லையே!

நீ சொல்லும் அரசியலில்,
நேர்மையே இல்லையே!
நியாயமே இல்லையே!
மனித நேயமும் இல்லையே!

எந்த கடவுளும்...
பாரதத்தில்,
மானுடத்தைச் சிதைக்கும்,
உன்னுடைய செயலை;
தடுக்க இல்லையே!

அதனாற்றான்,
நான் சொல்கின்றேன்...
வகுப்புபேத மனநோயனே!
கடவுள் இல்லவே இல்லையே!

திங்கள், 28 ஏப்ரல், 2014

இந்தியாவில் தாழ்த்தப்பட்டோர் என்ற அடிமைகள் நிலவரம் இல்லாத போது...


இந்து மதத்திற்கு, புதியதோர் பெயர்  `அழகிய ஊழல்' என்று சூட்டுவோ
மானால் மிகவும் பொருத்தமுடைய
தாக அமையும்.

இந்தியாவில் தாழ்த்தப்பட்டோர் என்ற அட்டவணைப் பட்டியல் SC ST மக்கள் இந்து மத ஒதுக்கீடுப் பட்டிகளை விலகி வெளியேறுகிறபோது இந்து மதமே இல்லை;  வேற்றுமை இல்லை; சுரண்டல் இல்லை;  ஊழல் இல்லை; மக்கள் இடையே சுயநலம் இல்லை.

தவிர இந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் மதம் மாறிய கிறிஸ் தவர்கட்கும் சொந்தந்தங்கள் என்கின்ற உறவு பிளவுராது தொடர்ந்து இருந்து வருகின்ற நிலைமையினிடையே இஸ்லாமியர் களும் இணைவார்களானால்
இந்தியா முழுமையும் ஆட்சி இந்து தாழ்த்தப்பட்டோர் வசமாகும்
[உம் - செல்வி மாயாவதி].

இந்நிலைமையில் இந்துமதத்திற்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் என்கின்ற அடிமைகள் நிலைமையை
தக்க வைக்கவும் பாதுகாகவும் சாதி இந்து தீவிர வாதிகட்கு வேறுவழிப் புலப்படவில்லை.

அதனாற்றான் இந்து தாழ்த்தப்பட்ட. மக்களை அச்சுறுத்தவும் அவர்களின் மறுவாழ்வு  சிந்தனைகளிலிருந்து அதிரடியாக திசை திருப்பவும், இஸ்லாமியர்களை நாட்டை விட்டு வெளியேற மிரட்டிக்கொண்டிருக்
கின்றனர்.

மற்றபடி இஸ்லாமியர்கள் ஓட்டுவங்கி
என்பதால் அவ்வாறு மிரட்டப் படுகிறார்கள் என்பதானது ஓரளவே சரியானது; ஏனென்றால் இஸ்லாமியர் ஓட்டுக்களும் பல்வேறு அரசியல் காரணங்களால் பிரிகின்றன.

ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

Oh! Our Bharath real soil sons and daughters!

இந்தியாவின் ஆதி முதற்குடி
மாமன்னர்கள் மற்றும்  மக்களின் வம்சாவளியினரான இன்றைய தாழ்த்தப்பட்டவர்களின் இரத்த
மரபுவழி உறவுகள் [சொந்தங்கள்]
இன்று, உலகத்தில் இரண்டு நாடுகளை ஆளுகிறார்கள்.

இந்திய அட்டவணை பட்டியல்படி
தாழ்த்தப்பட்டவர்களின்   சொந்தங்கள் ஆளும் அவ்விரு நாடுகள் மேற்குப் பாக்கிஸ்தானும், வங்காள தேசமும்தாம் [அந்நாள் கிழக்குப் பாகிஸ்தான்] என்பதானது
நம்பும் கடவுள் கதைகளைப் போன்று கற்பனை அல்ல.

இவ்வுண்மையானது  கைபர் போலன் கணவாய்கள் வழியாக இந்தியாவில் குடி ஆன முதலாம் அன்னியர்கட்கு நன்றாக தெரிந்திருக்கிறது.

பாபர் இந்தியாவை வென்றார்; இந்தியாவை வென்றாரே தவிர அவர்
இந்தியாவிலேய தங்கிடவில்லை.
அவர் இந்தியாவை விட்டு தன் நாடு திரும்பிட்ட நாளில் ஆட்சிப் பொறுப்பு களை இந்திய முஸ்லிம்களிடம் [மண்ணின் மைந்தர்களிடம்]
ஒப்படைத்தார்.

அவரோடு வந்த பன்னிரெண்டாயிரம் வீரர்களும் தங்களுடைய நாட்டுக்கு சென்று விட்டனர். பாபருக்கு முன்
இந்தியா மீது படை எடுத்த முஸ்லீம் மன்னர்கள் எல்லோருமே அவர்களோ அவர்களின் படை வீரர்களோ இந்தியாவில் நிரந்திரமாக தங்கிடவில்லை

அதனால் இந்திய துணைக் கண்டத்தில் மூன்று நாடுகளிலும் பரவலாக உள்ள முஸ்லிம்களும், இந்திய தாழ்த்தப்பட்ட இந்து மக்களும், மதம்மாறிய கிருஸ்தவர்
களும், பெளத்தர்களும், மற்றும் பகுத்தறிவுடைய திராவிட மொழிச் சொந்தங்களும்;  ஆக, எல்லோருமே பாரத மண்ணின் மைந்தர்கள்தாம்.

எனவே வரலாற்று அடிப்படையிலும் மற்றும் இரத்த மரபணு வழி சோதனைகள் மேற்கொள்வோம் என்றால்  மண்ணின் மைந்தர்கள் அனைவருமே சொந்தங்கள்தான் என்று ஒன்றுப் படுகிறபோது இந்தியா முழுவதும்  எந்தவொரு தனிமதம் சார்ந்ததாகவும், அரசு அமையாது.

மாறாக மேற்ப்படி இரத்த மரபணுச் சொந்தங்களின் குறிப்பாக செத்துப்போன மனுஷ்மிருதிப் படிக்கு இன்றும் தீண்டப்படத் தகாதவர்கள் என்று இந்து பேதமன நோயாளி
களால் பிரகடனப் படுத்தப்பட்ட தாழ்த்தப் பட்டவர்களின் ஆட்சிதான் நிரந்திர மாகிடும்.

இம்மாற்றம் நிகழ்தால் மக்களிடையே மத வேறுபாடுகள் பொருளாதார குடைச்சல்கள் [சுரண்டல் மற்றும்
ஏற்றத் தாழ்வுகள்] மற்றும் இந்து தாழ்த்தப்பட்ட மக்களை
அடிமைகளாக இழிவுச் செய்திடும்
நிரந்திர ஏற்ப்பாடுகள் முற்றுமாக
களையப்பட்டுவிடும்.

தவிர்க்க முடியாத இந்நிலமை
யாற்றான் -

இந்து மதத்தில் அட்டவணை அடிப்படையில்  பொருளாதார குடைச்சல்கள் மூலம் தாழ்த்தப்பட்ட சுயவலிமை அறியா தவர்களின் கவனத்தை திசைத் திருப்பவும்;

அவர்களை மிரட்டவும் அவர்கள்
எப்போதும் மிரண்டு அடங்கி
ஒடுங்கவும் அந்தப்படிக்கு அவர்கள்
மதமாற்றத்தை தடுக்கவும்;

- இஸ்லாம் மக்களை உலக அளவில் அம்மதத்தவர் பெரும் எண்ணிக்கை யில் உள்ளனர் என்று தெரிந்தும் பாகிஸ்தான் அனுப்பப் போவதாக இந்திய அரசமைப்பு சாசன சரதுகட்கு மாறாக முரணாக எதிராக அவ்வப்
போது  பிதற்றிக் கொண்டிருப்பது
சிலருக்கு  வழக்கமாகிவிட்டது.


திங்கள், 21 ஏப்ரல், 2014

படைத்தவன் ஆகாயத்தில் என்றான்!

படைத்தவன் எங்கேயாம்?
ஆகாயத்தில் என்றான்!
தான் பிறந்ததும், ஆகாயத்தில்;
என்றான்!

சொர்க்கம் எங்கேயாம்?
ஆகாயத்தில் என்றான்!
நரகமும்... நேரில் கண்டு;
திரும்பிட்டாற் போல்,
ஆகாயத்தில் என்றான்!

ஆனால், பேய்பிசாசுகள்;
பூமியில்தான் என்றான்!
குரங்குகள்தான் மனிதர்கள்
என்கின்ற...

அறிவியல் உண்மைக்கு;
முரணாக...
மனிதர்களை, குரங்குகள்;
என்றான்!

சாவதை சிவலோக...
பதவியாக, ஓதுகிறான்!
செத்தால்... பேயும்,
பிசாசுகளும், மனிதர்களே;
என்றான்!

என்ன ஊழல் இது?
அறிவியலை முடமாக்கி,
மூளையை...
குப்பைப் பேருந்து ஆக்கிடும்;
முரண்ப்பாடு!

மேலும், அவன் பிறந்தது;
நெற்றியில் [முகத்தில்]
என்றான்!
அந்தப்படிக்கு ஒரு...
ஆணுக்கும் பெண்ணுக்கும்,
அவன் பிறக்கவில்லை;
என்றான்!

அதனால் அவன்தான்
மானுடத்தில், உயர்ந்த சாதி;
என்றான்!

இப்படி... பாரதத்தில்,
மண்ணின் மைந்தரிடையே
பேதங்கள் ஓதி...
கடவுள் பூசைகள் என்று,
மூன்று வேளையும்;
உண்டான்!

இன்று   ஆட்சியைப் பிடிக்க,
ஓட்டுப்போடும் தகுதிப் பெற்ற,
எமது இந்திய முஸ்லிம்
சகோதரரை; பாகிஸ்தான்...
அனுப்பப் போவதாக;

தெருமுனை களில்,
இந்திய அரசமைப்பு சாசன
சரத்துகட்கு, விரோதமாக,
முரணாக, எதிராக, மாறாக,
மிரட்டுகின்றான்!

சட்டம் தவறுதல்களை,
திருத்திக்கொள்ள;
கால அவகாசம்...
தந்துள்ளது!

அதனால், திருந்திடாத, நிலைமையில்...
இவர் வென்றாலும்,
தகுதிநீக்கம் உண்டு!

இந்திய அரசமைப்பு சாசனத்துக்குக்  கீழ்படி!

அயலான் யார் என்றால்
அறியாயோ? கைபர்போலன்...
கணவாய் வழிவந்த காட்டு, மிராண்டிகள்தாம்...
ஒண்டவந்த பிடாரி [ஊர் பிட ஏரியை
உடைத்து]  ஊராரை...
விரட்டிட்டாற்போல்;
கடத்துவாயோ இம்மண்ணின்
மைந்தரை?
உன் நிலை உணர்ந்து...
ஒற்றுமை நேசி!
நீயோ முதலாம் அந்நியன்!
இரண்டாம் சுதந்திரப் போர்... கருத்தரிக்க வேண்டாம்!
இந்திய அரசமைப்பு சாசனத்துக்குக்
கீழ்படி!

ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

பாரதத்தை [தேங்காய்ப் போல்] ஏங்காய் உடைப்பதற்கு என்றும்!

தேங்காய் பிரியமோ? தென்னை
மரம்ஏறு!
மாங்காய் கணக்காய் மதத்தால், மிரட்டாதே!
தாங்காய் தவிர்வெறி;
சக்தி இழக்காதே!
பாங்காய் பதவியடை, பண்பறிந்து;
பாரதத்தை [தேங்காய்ப் போல்] ஏங்காய் உடைப்பதற்கு என்றும்!

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

ஆண்டவனை  நம்பென  ஓதும் கற்பனை சூன்யமே!

சூன்யமே!

இது திருவள்ளுவர் ஆண்டு,
இரண்டாயிரத்து 23*

மனிதன்...

கிரகம் விட்டுக் கிரகம்,
செல்லும்...
அறிவியல் யுகம்!

பூமியை விலகி செவ்வாயில்,
குடியேற...
பயணிக்கும்  காலம்!

அணுவின் பரிணாம...
வளர்ச்சியே!

தாயின் கருவறைக்குள்
சூழ் ஆனால் [எவ் உயிருக்கும்]
பிறப்பு!
இல்லையென்றால் சூன்யம்!

[ சூன்யம்... தாய் தந்தை
யார் என்ற தகவல் உட்பட
உறவு ஊர் நாடு மதம்;
எதுவுமே தெரியாத வெறுமை]

சீவன்   [விந்தணு
தொட   [பெண்ணின்...              
                    கருமுட்டையைத்
                    துளைக்க]

உடலை...
[ஆண் அணு-கருமுட்டைச்
சேர்க்கையை]

சிவம் என்கின்றோம்!

சாவு வர [இயங்காமை நிகழ]
அதையே...
சவம் என்கின்றோம்!

தின்றாலே சிவம்!
உண்ண இல்லையேல்,
சவம்!

பத்து நாட்கள் பட்டினி கிட...
உன் அங்கத்தில்,
எதுவுமே அசையாதே!

மானுட ஊனமே!
அன்பை, தேச ஒற்றுமையை...
சிதைத்து எதற்கு பேதவெறி?மனிதரை...
மாய்க்கவோ உன்மதம்?

* பாபர் மசூதி தகர்க்கப்பட்ட
   நாளிலஎழுதிட்டது!
   இன்றைக்கும்  பொருந்து
   கின்றது!



என் இமய எழுத்துகட்கு விலங்கிட...

அறிவியல் அறிவே!

என் இமைய எழுத்துகட்கு,
விலங்கிட...
ஒரு சமய செவ்வெறும்பு; சபதமிடுகிறது!

என் அன்பு உணர்வுகட்கு,
ஆற்றல்... மை;
உள்ளத்தில்...
ஊற்றெடுக்கின்றது!

அறிவியல் இயற்றல் திறன்,
மூளையில் இருந்து...
உற்பத்தி ஆகின்றது!

அதனால்...
என் எழுதுகோல்,
`வேற்றுமை' மை சாராது!

ஒற்றுமை வேட்க்கைக்குள்,
ஒன்றிட்டதால்...
ஒரு நாளும் சோராது!

அன்புச் செறிவுக்குள்,
ஆசை சரிவுக்குள்;
முடங்கும்...
முயங்கி நொறுங்கும்!

என் நெருப்பு எழுத்துகட்கு,
மை... மூளையுள் -
பசிபிக் பெருங்கடல் அன்ன,
தேங்கி அலை மோதுகின்றது!

என் எழுதுகோல் மூடியை,
மூட... மூடாது கிட... என்று,
வெருமனே வைக்க;
முடிவெடுக்கும் தகுதி,
உரிமை;
எனக்கே உள்ளது!

என் உரிமை... அது எங்கே,
இருக்கின்றது?
அறிவியல்... தினகரன்
கருவறைக்குள்;
எரிமலை குழம்பாய்...
சுழன்று கொண்டிருக்கின்றது!

வில்ஸ் வேர்ட்ஸ் எம்
ஒற்றுமை உலகத்தைக்
காண... இதோ,
புறப்பட்டுவிட்டது!








வியாழன், 17 ஏப்ரல், 2014

ஒற்றுமைப் பலம், உலக நலம்!

Wills in Kavithaichittu
Saturday, 24 November 2012

ஒற்றுமை வளம் உலக நலம்!

[தீண்டு]:   கலகம் விலகி
                    நலம் பெற...   உலகம்!

முன்னுரை:

இந்நாள் தலைமுறையினரின் எதிர்கால வாரிசுகள் துன்பமோ துயரமோ இன்றி மேன்மையுற வேண்டும் என்கின்ற அடிப்படையில் பின்வரும் கட்டுரையானது அமைகின்றது. இக்கருத்துக் கருவூலம் இந்தியா என்கின்ற தனிப்பெரும் நாடு மட்டுமன்றி முன்னேறாத பிறஉலக நாடுகளும் பயனுற வேண்டும் என்கின்ற அவா மற்றும் ஆதங்கம் பேரிலும் உருஆகின்றது! இக்கரு மழலையாவதும் நிராகரிக்கப்படுவதும்   அந்தந்த நாட்டு அரசுகளின் விருப்பம் மற்றும் மக்களின் மனோபாவம் சார்ந்தது!


கட்டுரை:

            2) மானுடம் வாழும் பூமிப் பரப்புக்குள் என்ன நடைமுறைக ளெல்லாம் ஒழிக்கப்பட வேண்டும் என்று எண்ணுகிறீகளோ அவற்றையெல்லாம் பட்டியலிடுங்கள். அவ்வாறான பட்டியலுக் குள் அநேகமாக இலஞ்சமும் ஊழல்களும் (கையூட்டுக்கள் பெறுவதும், தருவதும்) என்பதானது முதலாவதாக இடம்பெறக் கூடும். அந்தப்படிக்கு பட்டியலுக்குள் இடம் பெற்றிடும் அனைத்தும், அடுத்துவரும் பத்தியில் தெரிவித்திட்டபடி தகவல்கள் நடைமுறையில் அமுலுக்கு வரும் நாளிலிருந்து மூன்று ஆண்டுகட்குள் யாவும் களையப்பட்டுவிடும் என்பதானது ஒட்டுமொத்த மக்களின் நலம் மற்றும் ஒற்றுமையை ஏற்படுத்துதல் என்கின்ற அடிப்படையில் முறையே ஆய்வுச் செய்கையில் உறுதிப்படும்.

 
             3)  சமீபத்திய என்னுடைய *கவிதை ஒன்றில் பின்வருமாறு தகவல் தரப்பட்டுள்ளது:

          *குடும்பத் தேவைக்கேற்ப  நிலபுலங்கள்  
                               சொத்து உரிமைக்கும் உச்ச வரம்புகண்டு,
                  கொள்ளுப் பேரர் காலம் முடியும் மட்டும்    
                               செல்லும் வரம்புஎன்று  விதிகள் கொண்டு,
                   அனைவர்கும் கல்விவேலை  வீடுகள்போன்று மருத்துவ
                              அவசியமும், வழங்க அரசுகள் உரிய  சட்டம்கொணர,


        -- என்று உள்ள இக்கவிதையில் தெரியவருகிறபடி குடும்பத் தேவைக்கேற்ப   சொத்துக்கு உச்சவரம்பு அரசுகளால் நிர்ணயிக்கப் படுகிறபோது அவ்வாறு நிர்ணயிக்கும் உச்சவரம்புக்கு மேல் உபரியாக அறியப்படும் தனியார் உடமைகளை (அதிகப்படியான சொத்துக்களை) அரசு தன்வசப் படுத்திக்கொள்ளுமா என்றால் பின்தொடரும் தகவல்கள்படிக்கு சுமார் ஒருவருட காலத்திற்கு அதற்கு அவசியமே ஏற்பட வில்லை.

     4)  மேற்குறிப்பிட்டவாறு நிர்ணய வரம்புக்கு மேல் மிகுதியாக உள்ள சொத்துக்களை, சொத்துக்கள் மற்றும் உடமைகளின் உரிமையாளர் தன்னுடைய விருப்பப்படியும் முடிவுப்படியும் அவர்களாகவே மேற்படி நிர்ணய வரம்புக்குள் சொத்து இல்லாத சகோதர சகோதரிகள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள், முதியோர் இல்லங்கள், மேலும் உறவினர் இன்றி அலைகின்ற அனாதைகள் மற்றும் பிச்சை எடுத்து உயிர் வாழ்கின்றவர்கள் என்று எவருக்கும் (மனிதநேயம் அடிப்படையில்) தானமாக மற்றும் இனாமாகத் பகிர்ந்தளித்திடலாம் அல்லது வேறொருவருக்கு மொத்தமாகத் தரலாம் என்பதற்கு, தனியொரு நபருக்கும் மற்றும் அனைவருக்கும் உரிமையளிக்கப்படுகிறது. ஆனால், இது அதிகபட்சமாக ஒரு வருட காலத்திற்குள் நிகழ்ந்தாக வேண்டும்.


      5) எனவே சொத்து உச்சவரம்பு நிர்ணயச் சட்டம் சம்பந்தபட்ட அரசுகளால் நிறைவேற்றப்பட்ட நாளிலிருந்து அதிகபட்சமாக ஒரு வருட காலம் முடியும் வரை தனியார் எவருடைய சொத்தையும் மற்றும் நிறுவனங்கள் உடமைகளையும் அரசு கையகப்படுத்தாது. அதனால் பொதுவுடமைச் சித்தாந்தம் இக்கருத்துக் கருவூலங்கட்கு சற்றும் பொருந்தாது என்பதும் இங்கே அறிவிப்பாக வெளியிடப்படுகிறது. பொதுவுடமை சித்தாந்தம் ஏழைப் பணக்காரன் பாகுபாடுகளைக் களையமுற்படுவது. நமது கருத்துக்கள் அனைவருக்கும் சொத்துரிமை  சமஅளவில்  துய்க்கப்பட முறையே அனுமதித்துச் செயற்படுவது.

                                                     
    6) அடுத்தபடியாக சொத்து உச்சவரம்பு அளவானது எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?  இந்த வினாவுக்கான பதில் பின் வருமாறு:

       7) முதலாவதாக தனிஒரு குடும்பத்துக்கு மற்றும் குடும்ப உபயோகத்திற்கு அவசியமானவை எவை என்பதுப்பற்றி அறிய முற்படுவோம்.

       (1) குடும்ப உபயோகத்துக்கு சுமார் ஒரு ஏக்கர் நிலம்; அந்நிலத்தில் சுமார் அரை ஏக்கர் மிகாமல் ஒரு வசிப்பிடம் (அனைத்து வசதிகளுடன் கூடியது) (2) குடும்ப உறுப்பினர்கள் பதினெட்டு வயதைத் தாண்டிட்ட ஒவ்வொருக்கும் மனித நேயத்துடன் கல்வி ஆதாரத்தில் வேலை; (3)  தேவைக்கேற்ற சம்பளம்;   (4) குடும்ப உபயோகத்துக்கு இரண்டு குளிர்வுந்து (கார்கள்) (5) உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் விசையுந்து  (Bikes) மற்றும் மிதியுந்து (சைக்கிள்கள்) (6) ஒவ்வொரு குடும்பம்பத்தினருக்கும் மகளிர் உபயோகத்துக்கு மற்றும் பிற அவசரத் தேவைகட்கு ஒரு நூறு பவுன்களுக்கு மேற்படாமல் பிளாட்டினம் தங்கம் வெள்ளி நகைகள்; (7) கல்வி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புக்களில் (கல்வி துவக்கநிலை முதலாக) யார் எந்த அளவுக்கு கற்க விரும்புகின்றார்களோ படிப்புகாலம் முழுமைக்கும் படிப்புச் சார்ந்த செலவுகள் அனைத்தும்; மற்றும் ஆற்றல் ஆதாரங்களில் அனைவருக்கும் அரசு ஏற்பாட்டில் (வெளிநாடுகளில் உயர்படிப்பு உட்பட) இலவசம்; (8) எல்லோர்க்கும் அவ்வப்போது அல்லது எப்போதாவது அல்லது  நிரந்தரமாக ஏற்படுகின்ற உடல்நலம் குறைவு (நோய்) எத்தகையதாக இருப்பினும் பாகுப்பாடு ஏதுமற்ற மருத்துவம்; மற்றும் அக்காலங்களில் உணவு உடை அறைகள்வசதி அரசு பொருப்பில் முற்றுமாக இலவசம்; (9) குடியிருப்புப் பகுதியிலிருந்து அவரவர் பணியிடங்களுக்கு பணியாளர்கட்கும்; அவ்வாறே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் சென்றுவர மாணவர்கட்கும் (கார்பயணம் தவிர்போருக்கு) பேருந்து மற்றும் ஊருந்து (ஆட்டோ) போகவரப் பயணம் இலவசம்; என்கின்ற திடதிட்டங்கள் மற்றும் கொள்கைகள் பேரில் ஒரு அரசானது செயற்படுமாறு அமையப் பெறுமானால்... இப்போது தெரிவியுங்கள்... மேற்கொண்டு அவசியமானதாக ஒவ்வொரு குடும்பத்துக்கும்  வேறு என்ன வாழ்நாட்களில் இருக்கமுடியும்.


          8) அந்தப்படிக்கு ஒரு குடும்பத்தினர் அடிப்படை அவசியங்க ளான -

1)       சுமார் ஒரு ஏக்கர் நிலம்; அரை ஏக்கரில் ஒரு வசிப்பிடம்
          (அனைத்து வசதிகளுடனும் கூடியது)

2)       குடும்ப உபயோகத்துக்கு இரண்டு கார்கள்;

3)       உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பைக் மற்றும்
          சைக்கிள்கள்

4)       குடும்ப மகளிர் உபயோகத்துக்காகவும் மற்றும் குடும்பத்தினர்
          அவசரத் தேவைகட்காகவும்  ஒரு நூறு  பவுன்களுக்கு மேற்
     படாமல்  பிளாட்டினம் தங்கம் வெள்ளி நகைகள்;
         

-- என்று தனியாரது குடும்ப உபயோகத்துக்கு சொத்து உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்படலாம்.


         9)    மேற்குறிப்பிட்டவாறு சொத்துக்களை அனுபவிக்கும் எல்லை யானது அனைவருக்கும் பொதுவாக மற்றும் சமமாக ஒரு வரம்புக்குள் அடங்கிடும்போது பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மக்களிடையே தானாக மறையும்; போலி ஆர்ப்பாட்டங்களும் பொருளாதார வீணடிப்புக்களும் தேவையற்றது என்று மக்களே முடிவுசெய்திடும் நிலைமையும் எதிர்காலத்தில் உருவாகிடும் என்பது நிச்சயம்.



 *முழுக்கவிதையும் படிக்க

   (தீண்டு):   கலகம் விலகி நலம் பெற... உலகம்
 

  Click also:
  Reservation in EducationJobs etc.
  - A new doctrine on professionally basis


  Click also:
   Next  Reservation in EducationJobs etc. - A new doctrine on professionally basis

கவனி இனிநீ கவிதை அவனி!

கவனி இனிநீ கவிதை அவனி!
கவனம் கனிநீஎன்  கன்னி தமிழ்நீ!
புவனி மானுடப் பூநீ!

சொல்லச் சொல்ல இனிக்கும்,
அன்பு இலக்கணமே!
உன்னுள்...
செல்லச் செல்ல அணைக்கும்;
காதல் வனமே!

அள்ள அள்ள அவிழ்க்கும்...
ஆசை மலர்மனமே!
அகிலமோடு ஆகாயமும்
சுழற்ற சுழல, உடன்...
முயற்சியை மேற்கொள்;
 என் புவனமே!

நாளைய -
வில்ஸ் வேர்ட்ஸ் எம்,
ஒற்றுமை உலகம் - உன்
வலது கைவிரல் நுனியில்,
மலர்ந்து சுழலட்டும்!


-- Willswords M  Unity  world!
[http://willsinunityworld.blogspot.in]

செவ்வாய், 15 ஏப்ரல், 2014

என் கவிதைக்கு மகிழ்ச்சிதரும்  எதுவோ?

என் கவிதைக்கு மகிழ்ச்சிதரும்; எதுவோ?
நம் காதல்தான்!

நம் காதலுக்கு மகிழ்ச்சிதரும்;
எதுவோ?
உன் பார்வைதான்!

என் பார்வைக்கு மகிழ்ச்சிதரும்;
எதுவோ?
என்  ஆசைதான்!

என் ஆசைக்கு மகிழ்ச்சிதரும்; எதுவோ?
என் இதழ்கள்தான்!

என் இதழ்கட்கு மகிழ்ச்சிதரும்; எதுவோ?
இனிய ஓசைதான்!

இனிய ஓசையில்...
மகிழ்ச்சி; எதுவோ?
அன்பில் ஒன்றும்...
ஒற்றுமைதான்!

நம் ஒற்றுமைக்கு,
ஒளிவழி... எதுவோ?
வில்ஸ்வேர்ட்ஸ் எம்
ஒற்றுமை உலகம்தான்!

திங்கள், 14 ஏப்ரல், 2014

நான் நிலவுக்குச் செல்ல வேண்டும்

நான் நிலவுக்கு, செல்லவேண்டும்!
எதற்கு?
அங்கே வில்ஸ் வேர்ட்ஸ் எம்
ஒற்றுமை...
உலகம் காண வேண்டும்!

ஏன் நாம் ஒற்றுமையை;
இந்த மண்மீது...
பார்க்க முடியாதா?

இங்குதான்,  சாதிமனோ...
சண்டை வியாதிகளும்,
மத... பேதம் ஓதும்,
மானுட கிருமிகளுகம்;
திருந்தாமல் அலைகின்றனவே!
நான் நிலவுக்குக் கீழிருக்கும்
நிலாவைக் காண வேண்டும்!
கீழிருக்கும் நிலாவா?

அது உன் முகம்தான்!
என்னை நீ நோக்க,
எப்போதும் [உன்னை]
நான் பார்க்க வேண்டும்!

நான் செவ்வாய்க்குச்  செல்ல...
வேண்டும்!
செல்!
அங்கே நீ , என்னோடு;
கூடவர வேண்டும்!

நான் உன் வாய் இதழ்களை, பார்த்தாலே போதும்!
அந்தச் செவ்வாயுள்...
புகுந்த களிப்புத் தோன்றும்!

நான் -
உலகம் புகழ்...டென்சிங்
பெயர் எடுக்க,
எவரெஸ்ட் சிகரம்
காண வேண்டும்!

நீ டென்சிங் ஆகிடலாம்...
பின்ஓர்  நாள் - இப்போது
உன் அகம்  முகம் மூடி
என் ஆவலை...
அதிகரிக்க வேண்டாம்!


ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

அரசியலில் ஓட்டளிக்கும்  ஆண்டவன்யார்? செப்பு!

அரசியலில் ஓட்டளிக்கும்
ஆண்டவன்யார்? செப்பு!
இராதவனின் பாட்டு எதற்கு?

 ஆண்டவனின் கூத்து,
 அரசியலில் வேண்டாமே!
 வேணுகானம் விட்டுநாடு கா!

 தெய்வம் அவசியமோ?
 தேடிஅவனுள் ஒன்று!
 பொய்,ஆளும் போக்கில்; எதற்கு?

 இறைவனை காணஓடு;
 எங்கென்று தேடு!
 அரசியலுள் வேண்டாமே; ஆடு!

 இறைவா என்றுபோ, எங்கேயும்;
 தெய்வம்... [உண்டென்றால்] அரசியலுள் தானே வரட்டும்!

வியாழன், 10 ஏப்ரல், 2014

இவற்றுள் எந்த ஊழலைத்தான்  நிர்மூலம் ஆக்கிடுவார் இவர்?

அறிவியல் ஆதாரத்தில்,
நிரூபனம் ஆகாத போது;
உயிரனைத்தும்...
ஆண்டவனே படைத்ததாக,
ஓதுவது ஊழல்!

இவன் இவன் இன்ன இன்ன,
சாதியைச் சார்ந்தவன் என்று;
வாழும் நிலைமையை,
ஆண்டவன்...
தலைஎழுத்து என்றும்...

ஒருப் பெரும் மக்கட் பகுதியை,
சுதந்திரம்-சுகம், தீண்டா...
மத அடிமைகளாய்,
புறக்கணிப்பது ஊழல்!

வகுப்புவாரியாக அரசுகள், அமைந்திடாதவாறு;
உரிமைகள்...
இருந்திடும்போது;

மக்கள் ஒற்றுமை,
சுதந்திரம் மரபுகள் விலகி,
தேச வலிமைப் பற்று இல்லாது...

அரசியல் கட்சிகளுக்குள்,
மதம் - வகுப்பு அடிப்படையில்;
வேட்பாளர்களை...
நிறுத்துவது ஊழல்!

பணிஆர்வம் மற்றும் அறிவு,
தகுதி, திறமை -
இவைகட்கு
அப்பாற்ப்பட்டு...

மத சாதி மனோவியாதி...
பேதங்களை ஊதி... ஓதி,
ஓட்டுக்கள் பெற முற்படுவது;
மக்கள் ஒற்றுமைக்கு எதிரான,
தேச விரோத ஊழல்!

இவற்றுள்  எல்லா
ஊழல்களையும்
நிர்மூலம்
ஆக்கிடுவாரோ இவர்?

திங்கள், 7 ஏப்ரல், 2014

பணிகள் யாவும் தெய்வமென ஆமோ!?


நலம்கெட புழுதியில் புரளும்,
நாய்கள்...
கடவுளின் படைப்போ ?
வளமின்றி நாய்அன்ன,
பிச்சை எடுப்போர்...
ஆண்டவன் கொடுப்போ?

சாக்கடையை  உறைவிடமென மயங்கும் பன்றிகள்;
சொல்லும் [கூர்ம ]
தெய்வத்தின்...
 திருவிளை யாடலோ?

மானுடம்  செய்திடும்,
(அ )சுகாதாரப் ப(ன்)ணிகள்!
தெய்வமென ஆமோ!?

மனிதப்பசி  அறியா மானுடமே!
நீ  சொல்லும் கடவுள்,
நனவுள் எவர் முன்னாலும், வராதபோது...
கன வுள் தென்பட்டார் என்றால்,
பேதம் ஓதுவோர் ஏமாற்றும்
மத ஊழல் பொய்தானே?


If Modi says OK...


Castesims are the starting and main spots for corruptions at Hinduism; Gods and goddess' faith are basics.

If Modi says OK to erase the castesism and brainless castes' fights beyond castesism of Hindusism's feelings then he may be recognized easily by people that he is the PPM ever in India at his whole life time via all ensuing elections too. [PPM means permanent PM].




Through false godsfaith political actors...


Nature's outbreak was big bangs!l
Big bangs' outbursts were...
As such our solar, all stars!
Solar's outgrowth was world!

World outcomes are all livings!
Human livings' outflow is sixth sense!
Sixth sense outcries are,
Gods, goddess, godfaiths;
And devil thoughts!

Gods and etc., Evil thoughts
Outhouses are religions!
Religious outlays are
Songs, musics and dances!

So, for whole events power basic
And prime orgin are ever Nature!
Though we are all forced to dance
By godfaith false actors!
Like Tsunami waves' torture!

Is Modi ready to abolish all corruptions?



Is Modi ready to remove
Worst castesims' basics,
Of Hiduism which are used
For doing corruptions,
At India?

He may knew castesism
Of said Hinduism
That exists as strong
Foundation for
All corruptions at India!

Said Hinduism allows
Fights against to
Soil sons and daughters
Of reality Nationals
Since ancient time!

The isolated nationals
SCs STs at hinduisms
Are being hurted
By all  Caste Hindus via
Untouchability system
Since 1947 too!

And thus hurted SCs and STs
Are ever as slaveries!
Thus put them in poverty too!
Are these cruelty not corruption?

Meanwhile defraud that
Those happening are
Due to said gods' writing,
On every SC ST child's skull,
Before those national's birth;
Are these cheats not corruptions?

Is Modi ready to stop,
As such nonsense corruptions;
That's to clean whole castesism?
 He may start this devine duty,
 At least from his heart first;
 And at Hinduism next.






A new movement in India for removal of castes!



அகில இந்திய வகுப்பு வாரியான அரசியலமைப்பு
முன்னணி!

[இந்தியா வகுப்புவாரி அரசமைப்பு
முன்னணி]

 அடுத்து என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவில் -

ஏறக்குறைய அனைவரும் தங்கள் தாய்மொழி, பெற்றோர்கள், கிராமங்கள், மாநிலங்கள், நாடு மற்றும் கடவுள், தெய்வம் மற்றும் தெய்வ நம்பிக்கையை விட அதிகமாக -

நாட்டின் நலன், ஒற்றுமை
மற்றும் அனைத்து தேசிய சுதந்திரத்திற்கும் அப்பால் -

ஒவ்வொருவரும் தங்கள் சாதிகளையும் வகுப்புகளையும் விரும்புகிறார்கள். அவர்களின் 100 சதவீத சுயநலம்,
கல்வி வேலைகள் மற்றும் பிற உரிமைகளுக்கான இடஒதுக்கீடுகளுடன் இறுக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது.

எனவே வகுப்பு வாரியாக தீர்ப்புகள் கொண்டு வரப்பட்டு உருவாக்கப்பட்டால், சாதிகள், வகுப்புகள், மத வேறுபாடுகள் மற்றும் அனைத்து பிரச்சனைகளிலும் அனைத்து நாடுகளிடையே சண்டைகள் ஆகியவற்றின் அடிப்படையிலும் இடஒதுக்கீடு சரியான நேரத்தில் தானாகவே மறைந்துவிடும்.

மேலும் தாய்மொழி அடிப்படைகளை விட்டுவிடாமல், வகுப்பு வாரியாக அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் போது,
​​நாடுகளுக்கு இடையேயான இடஒதுக்கீடு சண்டைகள் ஒரே நேரத்தில் முடிவுக்கு வரும்.

இதற்கிடையில், ஒவ்வொரு தாய்மொழியையும் தாய்மொழிகள் வாரியாக இணைக்கப்பட்ட மாநிலங்கள் மூலம் சேமிக்க முடியும், அது ஒவ்வொரு வகுப்பு வாரியான ஆட்சிக்கும் வலுவான முதன்மையான பீம்களாக நிற்கும்.



ஒற்றுமை வளம் உலக நலம்  


முன்னுரை  : 

இந்நாள்  தலைமுறையினரின்  எதிர்கால  வாரிசுகள்  துன்பமோ  துயரமோ இன்றி  மேன்மையுற  வேண்டும்  என்கின்ற  அடிப்படையில்  பின்வரும் கட்டுரையானது  அமைகின்றது                

 கட்டுரை

                           2)   மானுடம்  வாழும்  பூமிப்  பரப்புக்குள்  எந்த  நடைமுறைக ளெல்லாம்  ஒழிக்கப்பட  வேண்டும்  என்று  எண்ணுகிறீகளோ  அவற்றை யெல்லாம்  பட்டியலிடுங்கள்  அவ்வாறான  பட்டியலுக்குள்  அநேகமாக  இலஞ்சமும்  ஊழல்களும்   கையூட்டுகள் பெறுவது தருவதும்  என்ப தானது  முதலாவதாக  இடம்பெறக்  கூடும்  அந்தப்படிக்கு  பட்டியலுக்குள்  இடம்  பெற்றிடும்  அனைத்தும்அடுத்துவரும்  பத்தியில்  தெரிவித்த  தகவல்கள்  நடைமுறையில்  அமுலுக்கு  வரும்  நாளிலிருந்து  மூன்று  ஆண்டுகட்குள்  யாவும்  களையப்பட்டுவிடும்  என்பதானது  ஒட்டுமொத்த  மக்களின்  நலம்  மற்றும்  ஒற்றுமையை  ஏற்படுத்துதல்  என்கின்ற  அடிப் படையில்  ஆய்வுச்  செய்கையில்  உறுதிசெய்யப்படும்  .  _