வெள்ளி, 10 ஏப்ரல், 2015

இயற்கை நாசங்களும் இறைவன் படைப்போ?


 

Photo:  Earth [owner]



ஆகாயம் துடிப்பில் மின்னல்இடி நெருப்பு;
குன்றுகள் வெடித்துச சிதறினால் எரிமலை;
மேகம் திரண்டால் சூழும் காற்று மழைவெள்ளம்;
பூமி பிளந்தால் புரண்டால் எழும்பூகம்பம்…

ஆழி அதிர்ந்தால் அறிவியலும் அஞ்சும் டி.சுனாமி;
கதிரவன் கனன்றால கருக்கும் ​நெருப்பு வரட்சி
ஓசோனுள் ​பெரிதானால் ஓட்​டை  மரணம் துயரம்
இயற்கை நாசங்களும் இறைவன் படைப்போ?    

உயிர்கள்...                                                                                                                                                                                                                                                                                                                                                           இறவாவழி அ​டைய ​தெய்வம் ​செய்திடு​மோ?

சனி, 4 ஏப்ரல், 2015

காட்டிடு தெய்வத்தை என்​றொருவர் கடவு​ளை சந்திக்கக் ​கேட்டால்


Photo: Thanthi TV


அறிவியல்  ஆதாரம் ஆண்டவனை உறுதிச்செய்திட,
ஆய்ந்தறிந்து பகர்வதற்கு யாரேனும் உண்டோ?

பிறப்புபெற்றோரால் அல்ல ​தெய்வச்​செயல் என்றும்;

மரணநாள்​ ஆண்டவன் எழுதிட்ட நிகழ்​​வென்றும்;

றைதலும் சுரண்டலும் படுபாதக ஊழல்!


காட்டிடு தெய்வத்தை என்​றொருவர் கடவு​ளை சந்திக்கக் ​கேட்டால்
காட்டிடாது கல்லை இறைவன் என்று பறைவது ஊழல்!
காட்டெனக் கேட்டிடும் கடமையாளனை மானுடத்துள்...
கருவுள் உருஆகாத நெல்பதர்போல் மாறிச்சபிப்பது ஊழல்!



இல்லாத ஒன்றை அடிப்படை ஏதும் இல்லாமல்...
இருந்திடுவதாய் இயம்பல் ஊழல்! - வெறும்
சொல்லாலே இறைவன் உண்டென்றும் நம்மைப்
படைத்திட்டதாயும் சாதிப்போற்றிப் பிழைப்பதும் ஊழல்!

எவரும்தம் உழைப்பில் உண்ணவேண்டும் அல்லாமல்;
குவலயத்துள் ஏழைகள் அடைவது கடவுளால் வந்துற்றதென்று
அவரது உழைப்பை திருடுவது ஊழல்! கடவுள்தான் யாவும்
எவருக்கும் தந்துற்றாற்போல் பொய்புனைந்திடுவதும் ஊழல்!

களைப்புக்கு ஏற்ப கடும்பசிக்கு எல்லை இல்லை!
இளைத்தும் பசிக்கு ஏற்பகூழ் இல்லை!
உழைப்புக்கு உண்மைக் கூலிதரப்பெற வில்லை!
விளைவித்தும் அரிசி வீண்கனா
சரிவர ண்டதிலலை!

ஆலயத்துள் அர்சகனாய் திருடிட்ட தில்லை!
ஆலய வருமானஓசி ஆதாயத்தில்
உயிர், நீடித்திடவில்லை!
எக்காரணத் தால்பறைந்தான்...
இவன்ஆண்டவனின் பிள்ளை! [ஆனால்]
அக்ரகாராத்தான் ஆனந்தம் அன்ன
பெரும்பான்மையினர் துய்த்திட்டதில்லை!

மடஅய்யன் கோயில்முன் புழுதிதெருவில் விசிறி
உடைத்திட்ட தேங்காயை பொறுக்கித் தின்றதில்,
படைத்திட்ட கடவுள் வாரிசுகளிடை பிளவுசண்டை!         கிடைத்திட்டது பசியாற சிரமமின்றிதினம் உயிர்தப்ப!
அடைந்திட்ட மாட்டிறைச்சி அதுதான் உணவு எல்லை!

சாதிக்குப் பின்தான் சகலமும்; சாவு...
செய்தியாய் தினமும் ஆகிடும்;
தெய்வம், மதம், நாடு, நகரம், உலகம்;
மாயும்வரை போற்றும் தாய்மொழிஉணர்வும்;
ஊரும், உறவுகளும், சொந்தங்கள், பந்தங்கள்;
நேர்மை, நீதி, நியாயம், நாணயம், என்று...
எதுவும் சாதிக்குப் பின்தான் சகலமும்!

நேர்மை, நீதி, நியாயம், நாணயம் கூட;
சாதிகள் அடிப்படையில்தான்...
எனும்படிக்கு (மனுஸ்மிருதி அதர்ம
அநீதி ஆதாரத்தில்) நாடு,
இன்றும் சாதி வேற்றுமைகளில் மிதக்க...

உன்னை நீ ஆண்டுகொள்!
என்னை நான் ஆளுகின்றேன்!
நீ வேறு சாதி; நான் வேறு சாதி;
என்று நிலவரத்தில் நீ வாழ...
நீ யார் என்னை ஆள?


என் சாதி மக்களுக்கு என்ன
செய்ய வேண்டுமோ நான் செய்கின்றேன்
உன் சாதி மக்களுக்கு நீ என்ன
செய்கின்றாயோ... செய்துகொள்!
 
அதனால் வேற்றுமையில் ஒற்றுமை
காண்போம்! சாதிகள் வாரியாக
மாநிலங்கள் அடைவோம்!
சாதிகள் வாரியாக மாநில...
அரசுகளமைந்திட செய்வோம்!

 
சுரண்டலைச் சுரண்டென சுரண்டிடும் சுரண்டரும்;
சுரண்டிடச் சுரண்டிட சுரண்டலும் சுருளுமோ?
சுரண்டலைச் சுரண்டெனும் சுரண்டரை சுரண்டிட
சுரண்டர்கள் சுருளுவர்; சுரண்டலும் சுருளுமே!