செவ்வாய், 11 நவம்பர், 2014

உன்இதயத்தில் புகுந்து, காதல் சுவாசிப்பதால்...



  Photo: Philomina minj



அண்ட விண்வெளிப் பசிக்கு; 
பெரும்வாய் அன்ன,
கருந்துளை [black hole] 
ஆயிற்று!

அன்றாடம் எண்ணற்ற,
ஒளிக்கதிர் பூமிகளை...
தன்வசமாய்,
ஈர்த்து விழுங்குகின்றது!
நம் சூரிய மண்டலம்,
தப்பி உயிர் பிழைத்து;
ஒரு கோடியில் ஓரமாய்... 
உருண்டு... ஓடுகின்றது!

உன்இதயத்தில் புகுந்து,
காதல் சுவாசிப்பதால்...
வலி அறியாத அன்பு; 
உன்கை வயலின் இசையுள், 
மூழ்கி, மகிழ்கின்றது!