வெள்ளி, 21 மார்ச், 2014

உலகம் உழைக்கின்றது உருண்டு பிழைக்கின்றது!


உலகம் உழைக்கின்றது; உருண்டு பிழைக்கின்றது! 
இரவு பகலென்று பேதம் ஓதாமல்
இரண்டும்  அணைக்கின்றது!
ஒவ்வொரு நாளும்  புரண்டு, சுழல்கின்றது!

நிலவு, வெளிச்சம் தருகின்றது!
இரவை மகிழ்விக்கின்றது!
அதனால் தேய்வுற்று,
மாதம் மூன்று நாட்கள் ஓய்ந்து;
சோர்வில் உறங்குகின்றது!

வானம் முகிலைத் தாங்குகின்றது!
முகில் மழையும் பொழிகின்றது - பூமி
குளிர இளைக்கின்றது!

மானுடம் என்ன செய்கின்றது?
ஒற்றுமை விலகி சண்டையிட்டு
மகிழ்கின்றது!
நாட்டைப் பிளவுப் படுத்தும்,                                                                                   மத வேற்றுமையைப் பரப்புகின்றது!

கலககுணம்  விலகி மானுடம்
உண்மையை உரைகின்றதோ?
உலகம் இறைவன் படைப்பென்று,
ஊழல் ஆட்சிக்கு அலைகின்றது!

ஒரு மனிதன் கலக்கம் (கலகம்) செய்கின்றானே!