Photo: Payal Singh
மனித முண்டம் சிறியதே! மதகரிக்கு அதுபெரியதே!
மனிதகழுத்தும் மதகரிதலையும்
இணையவாய்ப்பு இல்லையே!
மனிதமுண்டமும் மதகரிதலையும்
பொருந்தபிள்ளை யார்என்றால்
மனிதஅம்ச பார்வதிசிவன் இருவருள் யார்மதகரியே?
சங்குகரன் தங்கைமகன்! யானைமுகன் எங்கே?
தங்கநிறன் கங்கையணி பிறையோன்முருகன் எங்கே?
பொங்கிட்ட பாற்கடல்உலக வரைப்படத்தில் எங்கே?
பாற்கடலை கடைந்திட்ட மத்துமலை எங்கே?
கயிறு ஐந்துதலை அரவணை உயிரோடு எங்கே?
உயிரிலாது கடவுளோ?
மண்பொம்மை
பாடையிலே கண்டேன்!
பாற்கடல்வெண்ணெய் உண்டதாக...
பறைவோர் தெய்வங்கள் எங்கே?
பாற்கடலை கடைந்ததாக ஓதுவோனின்
தேவர்அசுரர் எங்கே?
திங்கள்பிறை அணிந்திட்ட இடுகாட்டு...
சிவப்பெருமான் எங்கே?
மங்கையொரு பங்கன் அந்தபங்கனின்,
மைத்துனன் பெருமாள் எங்கே?
பங்கம்படப் பிறந்திட்டவன்,
கரிகரசுதன் கதைப்படி எங்கே?
நான்முகன் பிரம்மன் அந்த சிங்கமுகன் நரசிம்மன்
இருகடவுளும்தான் எங்கே?
சங்குகரன் தங்கை அங்கையற் கண்ணி எங்கே?
மங்கையர் மூதேவியர் அலைமலைகலை எங்கே?
அய்ங்கரத்தோன் எங்கே? ஆறுமுகன் எங்கே?
இன்னும் யார்யாரோ தெய்வம்என்று உளரோ உயிரோடு;
பக்தர்காண அனைவரையும் கட்டிதேரில் இழுத்துவா இங்கே!