வெள்ளி, 29 ஜூலை, 2016

தெய்வம் என்பது சூன்யம்... காணல் நீர்!

We need the machine which will kill all gods, destroys them into oblivion and replaces them with the warmth feeling of reason and knowledge.

காடுப் பிரிப்பில் சண்டைகள்  கண்டு 
சொத்துக் காகஅன்று:

ஆடியஉன் சொந்த அண்ணன் மார--
டைப்பில் மரித்துபோக...

விநாயகன் பொம்மைஅன்ன பாடையில்...
காண் தருமோ தெய்வம்?

கனாகாணும் பிரபஞசத்தில்?  கடவுளும்
பொய்; உயிர்திரும்புமோ?

கூடுவிட்டு சுவாசம் நிற்க, குடியிருந்த-- 
வீடு விலகி...

மானுடம்  மோதல் செய்து--
அன்றாடம்;

இடுகாடு செல்லும் நிலமை-- 
அவசியமோடா?

தெய்வம் என்பது  சூன்யம்... 
காணல் நீர்!

புதன், 27 ஜூலை, 2016

உன்னை எனக்குள்தந்து சாதியிலா சரித்திரம் தோன்ற...

Katrina Kaif
காதல் வளைத் தளத்துள் ளே-என்
கவிதைக் கருசிரிக்கும் நிலத்திலே;
மோது மதுஅலை சுழலும்; சுரங்கமே!
ஆடுதேதேன் ஈஏன்? மகரந்த அரங்கமே!

வளர்ந்த கொடியின் அசைவிலே,
கனிய-பூ இதழ்கள் விரியவே...
விதை எழிலும் சிரித்து, சிதரவே...
நீ முயங்கும்  துருவங்களுள்...
எதைக்கண்டு நான் மயங்கினேன்?

உன்னை எனக்குள் தந்து மனத்துள்ளே!
இணை அன்பு வனத்துள் ளேஎன்--
தவிப்பின் வெடிப்புள்ளே சாதியிலா...
சரித்திரம் தோன்ற, வாஉள்ளே!