செவ்வாய், 27 அக்டோபர், 2015

ஆகாய சுழற்றும் சுழலுள்​ளே, யாவும் மடியும் முடிவிலே!


  

Many in India’s literary community are disgusted. Dozens 
of writers say every day brings more evidence of intole-
rance and bigotry going mainstream — a man

   பு​கைப்படமும் தகவலும்:  Prakash JP


சாதி மனநோயனே! 

          சமயநிற முரடனே!

சாவு உன்னை வந்துற பிணமே 

என்ற நிலைமையே!

ஆதி குரங்குஉரு மாறியே  

மனிதன் என்று ஆயிற்றே!

ஆகாய சுழற்றும் சுழலுள்​ளே...

யாவும் மடியும் முடிவிலே!



ஈன சாதி தோன்றவே...

இறந்து வாய்மைப் பட்டதே!

ஆனநீதி யாவையும்...

அழிந்து போக லானதே!

ஊண ஓதல் யாகத் துள்மதி

ஊண முற்ற மனிதனே!

காணநீதி நாட்டுள்ளே விலகிடு;

பேதமத அம்சமே!


சாதி மனப்புண்  ணடாச  

டங்கு சாமி சீழடா!

ஓதிஏய்க்கும் உளுத்த ரிங்கு 

பேத ​நோய்ப  ரப்பும் ஈயடா!

நீதி நேர்மை உயிர்பெற 

நீயும் நானும் தானடா!

சாதி விலகி ஒன்றிவாழும் 

சரித்தி ரத்தைக் காணடா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக