செவ்வாய், 27 அக்டோபர், 2015

ஆகாய சுழற்றும் சுழலுள்​ளே, யாவும் மடியும் முடிவிலே!


  

Many in India’s literary community are disgusted. Dozens 
of writers say every day brings more evidence of intole-
rance and bigotry going mainstream — a man

   பு​கைப்படமும் தகவலும்:  Prakash JP


சாதி மனநோயனே! 

          சமயநிற முரடனே!

சாவு உன்னை வந்துற பிணமே 

என்ற நிலைமையே!

ஆதி குரங்குஉரு மாறியே  

மனிதன் என்று ஆயிற்றே!

ஆகாய சுழற்றும் சுழலுள்​ளே...

யாவும் மடியும் முடிவிலே!



ஈன சாதி தோன்றவே...

இறந்து வாய்மைப் பட்டதே!

ஆனநீதி யாவையும்...

அழிந்து போக லானதே!

ஊண ஓதல் யாகத் துள்மதி

ஊண முற்ற மனிதனே!

காணநீதி நாட்டுள்ளே விலகிடு;

பேதமத அம்சமே!


சாதி மனப்புண்  ணடாச  

டங்கு சாமி சீழடா!

ஓதிஏய்க்கும் உளுத்த ரிங்கு 

பேத ​நோய்ப  ரப்பும் ஈயடா!

நீதி நேர்மை உயிர்பெற 

நீயும் நானும் தானடா!

சாதி விலகி ஒன்றிவாழும் 

சரித்தி ரத்தைக் காணடா!

சனி, 10 அக்டோபர், 2015

மாட்டுக்கறி ​கொள்​கை அரசியல் மதம்சாதி க​ள்யாவும் அழிய...


  Photo: Prakash JP 


ஒரேசாதி(மானுடம்) ஒரேமக்கள் என்றுஉடன்

நாட்டுப்பற் றோடுநீ ஒன்று!


இராஎங்கும் ஓதுவோன் வேற்று மைமன​நோய்

பித்து ஓடும்  ஓர்நாள் க​லைந்து!


மாட்டு இ​றைச்சி ​கொள்​கை ​கொண்ட மகாஊழல் அரசியல் கட்சி!
ஓட்டு ​கேட்கும்  முதலாம் அன்னியன் அனுமன்கும்பல் ஒன்று…
மாட்டுக்கறி உண்டதாகமுக மதியர்ஒருவ​ரை விரட்டிச்​சென்று;
கூட்டமாக கற்க​ளை எறிந்து கொன்றிட் டதுஎன்ன ​கொடு​மை!


தீட்டு மதத்தால் ​மண்ணின் ​மைந்தாஉன் அடி​மைநி​லை தளராது!
நாட்டுள்நம் மூதா​​தையர் உறவுவழி ச​கோதர​ரை நாடுஒன்று;
மாட்டுக்கறி ​கொள்​கை அரசியல் மதம்சாதி க​ள்யாவும் அழிய...

நாட்​டை விட்டுவெளி​ யேறட்டும்; உடன்ஒன்றுபடு  துரத்து!

மேலும் படி:
காந்தியா​ர் சுடப்பட்டு இறந்திட்டதற்கு காரணம்...