செவ்வாய், 23 ஜூன், 2015

சுரண்டும் தீயசக்திகள் உள்நோக்கம் ஒழிவுறாது, யோகாஒருநிலைப்படாது!

"உலக அளவில் யோகா தினம் கொண்டாடப்பட்டதன் மூலம் 
இந்தியா சாதனை படைத்துள்ளது" - மத்திய வெளியுறவுத்துறை 
அமைச்சர் சுஷ்மா சுவராஜ்,,,

Thanthi TV


பிரமாண்டம் கைப்பிசைய, பூமாவோ நெழிய;
வருணி பிரசவித்தாள்!

கருமாரி மேகம் நிலைத் தடுமாறி...
பெருமாரி பிழிய குடிசைகள் மிதக்க;


'பார்'வதி சாக்கடை ஊற்றாகி மிதிப்பட;
சிவ சிவ சகதி இந்திய  தெருக்களிலே; 
இடி மின்னல்... தாண்டவம் ஆட!


நாறிடுது பல நகரங்கள்!
இந்துத்துவா தாழ்த்தப்பட்டோர்
நாடுகின்றனர் கோயில்...

தீண்டாமை வன்கொடுமை!
கோயில்களுள் புக அனுமதியில்லை!

ஓடினர் பள்ளிவாசல்கள் நோக்கி...

ஓடினர் ஒதுங்கினர் ஒடுங்கினர் நடுங்கிடவே!

அவ்ஏழைகள் தினம்படும் பாடு

அல்லல்ஓலம்! கவலை கல்லிலும் ஓலம்!
செப்பிடு யாவும் யோகாவே!


வாய்உண்ணல் அறிந்திடவில்லை; உழைத்தும்
    வயிறு பசிப்பிணி சரிவர ஆறிடவில்லை!
பாய்கிழிய ஏழை உறங்க புழுதியினூடே;

    பரிதாபம் வீதிஎல்லையில் அமந்து ஏங்க;
சாதிகள் ஒழிய, மறையும் வறுமைச்  சாவுகள்!
    மசூதிகளை இடிக்கையில் மனம்ஒருநிலைப் படுகிறதே!
பேதமதம்தீய யாகங்கள் முதலில் அழியட்டும்!

பிறகு எல்லோரும் செய்வோம் யோகா!


இல்லாத இறைவனுக்கு இங்கே...
கோயில் கட்ட அன்றாடம்
எந்த மசூதியை இடிப்பதென்று [கு]தர்க்கம்!

கல்லாத மூடர்அன்ன பலசூத்திரக் குரங்குகள்;
கற்றும் பெண்அன்ன மதபோதை அடிமைகளாய்,
கடவுள் உண்டென்று சுரண்டும் மயக்கம்!


பொல்லாத சாதிமன நோயாளிகட்கு மட்டுமே;

உண்டவை யாவும் சீரணம் ஆகிட... தடை செய்யாது
யாகமும் யோகாவும் செய்திடும் வர்க்கம்!

சகதி புழுதியிடை வயல்வெளி முற்கள் களைகளிடை;
தொளிலாளி, விவசாயி, வறுமையிடை தற்கொலைக்கே!
ஒவ்வொரு நாளும் துடித்திடுது மனமே!

அதனால -

கடவுள் மதம்யாகம் கயமைஓதல் தடைசெய் யாது,

மடமைபேத ஊழல் மனங்களி லிருந்து அகற்றிடாது;
சுரண்டும் தீயசக்திகள் உள்நோக்கம் ஒழிவுறாது!

யோகா மூலமும் உடலும் மனமும் ஒருநிலைப்படாது!

வியாழன், 4 ஜூன், 2015

சாதி சாய குளியல் இலலை; 108 தேங்காய்[கள்] உடைத்ததில்லை!


ஐஐடி என்பது ஐயர் ஐயங்கார் டெக்னாலஜி" - திராவிட கழக தலைவர் கி.வீரமணி கருத்து..
#KVeeramani #IITMadrasRow #StudentsGroupBan

  Photo:   Thanthi TV


ஆச்சரியக் குறியே!என்  அற்புத தமிழ்மயங்கும் வரியே!
பாடல் ஒன்றுப் பாடநீ மேடை ஏறும் போது,
உன்தகுதி மீது பிறவிப் பேதபுழுதி ஊடுருவிப்  படிய லாமா?
திறமைகள்மேல் சாணம் தெளிப்பது மானுடமோ?

அறிவியல்வினா நாயகன்நீ தோன்ற; உன்முன்...
விண்ணும் வியந்து விடைகளை சமர்ப்பிக்க - அவன்
நம்பும் படைப்பு ஆண்டவன் வருவானா? - ஆய்வாயே!
கேள்விகளும் நீயே! பதில்களும் நீயே [எனநீ]ஆவாயே?

பிரசவிக்கும்  பெண்உறுப்பை  தகுதியாக நிர்ணயித்து - உன்
கருஉரு மூலங்கட்கு சாதிகள் பெயரிட்டு  பேதவம்சன்
அறிவின்றி உன்அன்னையை அவமதிக்க விடலாமா?
பெருமையோடு நீ  கற்றுமுன்னேற, கடவுளோ! ஏணிஆமோ?

தாயின் மடிமேல்  அமர்ந்து செம்மொழி தமிழும்பருகி உயர்ந்தாய்!
காயம்வியக்க தமிழால் அறிவியலாக மாறிநிமிர்ந்தாய்  - சாதி
சாயம் குளியல் இலலை; 108 தேங்காய்[கள்] உடைத்ததில்லை!
வெற்றிச் சிகரம் தொடும்முன் ஐ ஐ டி-யில் வேற்றுமைபுழுதி படிய லாமா?
திறமையே நீயாய் இருக்க உன்மேல் சாணமாய் விழுவது யாரோ?

தோழ்வி துவம்சம்ஆகும்! நெஞ்சை நிமிர்த்து; துவண்டு மயங்கிடாதே!
வாழ்வு என்ன வாழ்வு என்று இறங்கி புறமுதுகு... காட்டிடாதே!
வளையும்முதுகை நிமிர்த்தி உயர்ந்தவன் நீயே ஆகவேண்டும்!
ஊருள் பேதம்அகற்றி ஒற்றுமைக்கு பாலம்அமைக்க வேண்டும்!

திங்கள், 1 ஜூன், 2015

தங்​கையின் குழந்​தை பெரியவன் ஆகி மாமன் கம்ச​னைக் ​கொல்வான் ​சோதிடம் ஓர் ஊழல்!



   Photo :   Sandhya Rani



 
தன்னுடைய தங்கைக்கு பிறக்கின்ற குழந்தை வளர்ந்து
பெரியவனானால் மாமன் கம்சனைக் கொள்வான்
என்பதாக சோதிடம் இருந்திட்டதாக வதந்தி ஓர் ஊழல்!
                                                                                                                       
[இதனால் குழந்தை ஏசு பிறந்தால் உடன் கொல்ல வேண்டும்
என்ற ரோது மன்னனின் வரலாறு கம்சன் தொடர்பான
கதையில் கற்பனையாக நுழைந்துற்றது என்கின்ற வஞ்சகம்
வெளி உலகுக்கு தெரியாமற் போயிற்று!]

கம்சன்கொடுமை மதியாளனாக இருந்திருக்கும் பட்சத்தில்
தன்னுடைய தங்கையின் எட்டாவதுமைந்தன்பெரியவனாகி
தன்னைகொல்வான் என்பதை நம்பியிருந்தானானால்
தன் உடன் பிறந்தவளையும் அவளுடைய கணவன் வாசு
தேவனையும்கொல்லவே ணைகளை வழங்கியிருப்பான்.

அதனால் சிறுவனான கண்ணனை கம்சன் பல சந்தர்ப்பங்களில்
கொல்ல முற்பட்டான் என்பதானது உண்மையற்ற வதந்தி
ஆயிற்று.  அவ்வாறு  பொய்யாக பரப்பிட்ட கற்பனைகள்
தமிழ் குடிகளிடையேபெரும்பாலோர் கம்சனுக்கு எதிராகவும்
கண்ணனுக்கு ஆதரவாளர்களாகவும் மாறிட்டனர்.

முதலாம் அன்னியர்களின் (​பேத வம்சத்தவரின்)
ஆதரவாளனாக கம்சனின்மைத்துனன் வாசுதேவன், ​ஆரியன்
நிலைமையில்செயற்பட்ட தன்மையால் நாடு அபகரிப்புக்
குள்ளாகிடக் கூடும் என்றும் என்று கம்சன் அஞ்சினான்!

அந்தப்படிக்கு, தம் தமிழ்குடிமக்கள் ஆரியர்களின் அடிமை 
ளாகிடும் அபாயம்நேரிடலாம் என்கின்ற அய்யப்பாடும்
தோன்றிட்ட நிர்ப்பந்தத்தால் தமிழ் மாமன்னன் ​​கம்சன்
எதிரிகளை ஒடுக்க மைத்துனன் வாசுதேவனுடன்
அவனுக்கு ஆதரவாகசெயற்பட்ட  தங்கையையும் ​​சேர்த்து
அன்பு காரணமாக அவர்களைக்கொல்லாது சிறையிலடைத்தான்.

நாடற்ற வாசுதேவன் ஆரியனாக இருந்திட்ட நிலைமையால்
அவனுடைய மகன் கண்ணன் ஆரியர்களின்பேதவம்ச அரசை
நிருவிட முற்பட்டான்  ஆரிய அரசுகள் பாரதத்தில் நிறுவிட
படவும் மற்றும் ஆரியர் அல்லாத அரசுகளிலும் பார்ப்பனர்கள் 
மந்திரிகளாக இருந்துற்றதற்கும் கண்ணனின் ஆதரவுபெரிதும்  
உதவிட்டதால்ஆதியில் அவன் ஆரியர்களின் கடவுளாகினான்  
என்பது சிதம்பரம் இரகசியம்அன்ன  பாதுகாக்கப்படுகிறது.