செவ்வாய், 23 ஜூன், 2015

சுரண்டும் தீயசக்திகள் உள்நோக்கம் ஒழிவுறாது, யோகாஒருநிலைப்படாது!

"உலக அளவில் யோகா தினம் கொண்டாடப்பட்டதன் மூலம் 
இந்தியா சாதனை படைத்துள்ளது" - மத்திய வெளியுறவுத்துறை 
அமைச்சர் சுஷ்மா சுவராஜ்,,,

Thanthi TV


பிரமாண்டம் கைப்பிசைய, பூமாவோ நெழிய;
வருணி பிரசவித்தாள்!

கருமாரி மேகம் நிலைத் தடுமாறி...
பெருமாரி பிழிய குடிசைகள் மிதக்க;


'பார்'வதி சாக்கடை ஊற்றாகி மிதிப்பட;
சிவ சிவ சகதி இந்திய  தெருக்களிலே; 
இடி மின்னல்... தாண்டவம் ஆட!


நாறிடுது பல நகரங்கள்!
இந்துத்துவா தாழ்த்தப்பட்டோர்
நாடுகின்றனர் கோயில்...

தீண்டாமை வன்கொடுமை!
கோயில்களுள் புக அனுமதியில்லை!

ஓடினர் பள்ளிவாசல்கள் நோக்கி...

ஓடினர் ஒதுங்கினர் ஒடுங்கினர் நடுங்கிடவே!

அவ்ஏழைகள் தினம்படும் பாடு

அல்லல்ஓலம்! கவலை கல்லிலும் ஓலம்!
செப்பிடு யாவும் யோகாவே!


வாய்உண்ணல் அறிந்திடவில்லை; உழைத்தும்
    வயிறு பசிப்பிணி சரிவர ஆறிடவில்லை!
பாய்கிழிய ஏழை உறங்க புழுதியினூடே;

    பரிதாபம் வீதிஎல்லையில் அமந்து ஏங்க;
சாதிகள் ஒழிய, மறையும் வறுமைச்  சாவுகள்!
    மசூதிகளை இடிக்கையில் மனம்ஒருநிலைப் படுகிறதே!
பேதமதம்தீய யாகங்கள் முதலில் அழியட்டும்!

பிறகு எல்லோரும் செய்வோம் யோகா!


இல்லாத இறைவனுக்கு இங்கே...
கோயில் கட்ட அன்றாடம்
எந்த மசூதியை இடிப்பதென்று [கு]தர்க்கம்!

கல்லாத மூடர்அன்ன பலசூத்திரக் குரங்குகள்;
கற்றும் பெண்அன்ன மதபோதை அடிமைகளாய்,
கடவுள் உண்டென்று சுரண்டும் மயக்கம்!


பொல்லாத சாதிமன நோயாளிகட்கு மட்டுமே;

உண்டவை யாவும் சீரணம் ஆகிட... தடை செய்யாது
யாகமும் யோகாவும் செய்திடும் வர்க்கம்!

சகதி புழுதியிடை வயல்வெளி முற்கள் களைகளிடை;
தொளிலாளி, விவசாயி, வறுமையிடை தற்கொலைக்கே!
ஒவ்வொரு நாளும் துடித்திடுது மனமே!

அதனால -

கடவுள் மதம்யாகம் கயமைஓதல் தடைசெய் யாது,

மடமைபேத ஊழல் மனங்களி லிருந்து அகற்றிடாது;
சுரண்டும் தீயசக்திகள் உள்நோக்கம் ஒழிவுறாது!

யோகா மூலமும் உடலும் மனமும் ஒருநிலைப்படாது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக