ஐஐடி என்பது ஐயர் ஐயங்கார் டெக்னாலஜி" - திராவிட கழக தலைவர் கி.வீரமணி கருத்து..
#KVeeramani #IITMadrasRow #StudentsGroupBan
#KVeeramani #IITMadrasRow #StudentsGroupBan
Photo: Thanthi TV
ஆச்சரியக் குறியே!என் அற்புத தமிழ்மயங்கும் வரியே!
பாடல் ஒன்றுப் பாடநீ மேடை ஏறும் போது,
உன்தகுதி மீது பிறவிப் பேதபுழுதி ஊடுருவிப் படிய லாமா?
திறமைகள்மேல் சாணம் தெளிப்பது மானுடமோ?
அறிவியல்வினா நாயகன்நீ தோன்ற; உன்முன்...
விண்ணும் வியந்து விடைகளை சமர்ப்பிக்க - அவன்
நம்பும் படைப்பு ஆண்டவன் வருவானா? - ஆய்வாயே!
கேள்விகளும் நீயே! பதில்களும் நீயே [எனநீ]ஆவாயே?
பிரசவிக்கும் பெண்உறுப்பை தகுதியாக நிர்ணயித்து - உன்
கருஉரு மூலங்கட்கு சாதிகள் பெயரிட்டு பேதவம்சன்
அறிவின்றி உன்அன்னையை அவமதிக்க விடலாமா?
பெருமையோடு நீ கற்றுமுன்னேற, கடவுளோ! ஏணிஆமோ?
தாயின் மடிமேல் அமர்ந்து செம்மொழி தமிழும்பருகி உயர்ந்தாய்!
காயம்வியக்க தமிழால் அறிவியலாக மாறிநிமிர்ந்தாய் - சாதி
சாயம் குளியல் இலலை; 108 தேங்காய்[கள்] உடைத்ததில்லை!
வெற்றிச் சிகரம் தொடும்முன் ஐ ஐ டி-யில் வேற்றுமைபுழுதி படிய லாமா?
திறமையே நீயாய் இருக்க உன்மேல் சாணமாய் விழுவது யாரோ?
தோழ்வி துவம்சம்ஆகும்! நெஞ்சை நிமிர்த்து; துவண்டு மயங்கிடாதே!
வாழ்வு என்ன வாழ்வு என்று இறங்கி புறமுதுகு... காட்டிடாதே!
வளையும்முதுகை நிமிர்த்தி உயர்ந்தவன் நீயே ஆகவேண்டும்!
ஊருள் பேதம்அகற்றி ஒற்றுமைக்கு பாலம்அமைக்க வேண்டும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக