செவ்வாய், 29 டிசம்பர், 2015

உன்னால் காதல்... வாழ்கை ஆயிற்று!

  
   
Photo:  Christa B. Allen


உன்னிலிருந்து
       அன்பு விதைப்பெற்றேன்!
உன்னிலிருந்து
       காதல் கொடிவளர்த்தேன்!
உன்னிலிருந்து கவிதை -
       மகரந்தங்களை தூவிவிட்​டேன்!
உன்னிலிருந்து கனிகள்மணங்களை
       காற்றில உதிர்த்திட்டேன்

என்னால்நான்
       துணையை விலகிட்டேன்!
என்னால்நான் குடும்பத்தைத்
       தொலைத்திட்டேன்!
என்னால் என்றன்
       உறக்கம் மறித்திட்டது
என்றன்உயிரை
       நம்காதல் காப்பாற்றுகின்றது!

உன்னால் என்றன்
       சிந்தனை முளைவிட்டது!
உன்னால் என்றன்
       கற்பனைகள் விரிந்திட்டன!
உன்னால் என்னுள்
       காவிய கவிதைகள் மணக்கின்றன!
உன்னால் எனக்கு
       காதல், வாழ்கை ஆயிற்று!

என்னால் ​தோழ்வி உனக்கில்​லை!
எனக்​கே என்​னைக் காப்பாற்று!

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

எங்கும் இல்லா இ​றைவ​னை; நாடி நா​டெங்கிலும்...

Embedded image permalink
 



கண்ணன்ஓர் கடவுள் என்றால் அவ​​னொரு

ணையால் மாண்டிட்ட காரணம் ஏன்?


இராமன் என்பவன் றைவன் என்றால்
ஆற்றில் விழுந்துஉயிர் விட்டது ஏன்?                                                 

ஈசன் என்பவன்தெய்வம்தான் என்றால்
எங்கேஅவன்சென்றான் விவரம் றைவீர்

உயிரைக்கொடுத்து உயிரை எடுக்க
எமனாம்! எமனைப் டைத்தவன்  ஆண்டனோ?

கயி​​றைக் ​​கொடுத்துஅக் காலனை அனுப்பிட்ட
தாய்ச்செப்பும் கடவுள் எவனா னாலும் கற்பனையே!

எங்கும் இல்லா றைவனை ஏங்கிக் காணத்தேடியே
எங்கும் இல்லா றைவனைநாடிகோயில் குளங்களே
செல்லுகின்ற மானுடமே! தீண்டும் சாவு நிற்குமோ?
சொல்லுகின்ற கடவுளும்நேரில் காணதோன்றுமோ?

தேடி எங்கும் இல்லா றைவனை
       தேடித்தேடி இருப்பதாக
நாடி நாடெங்கிலும் நாடி கோயில்கள்
       குளங்கள் சுற்றியே!
வாடி வாழ்நாளில் எவனுமே
       தெய்வம் ​​தோன்றக் கண்டதில்லையே!
கோடிகோடிசெத்தும்  ஒருவனும்
       திரும்ப பிறந்ததும் இல்லையே!