வியாழன், 17 ஏப்ரல், 2014

ஒற்றுமைப் பலம், உலக நலம்!

Wills in Kavithaichittu
Saturday, 24 November 2012

ஒற்றுமை வளம் உலக நலம்!

[தீண்டு]:   கலகம் விலகி
                    நலம் பெற...   உலகம்!

முன்னுரை:

இந்நாள் தலைமுறையினரின் எதிர்கால வாரிசுகள் துன்பமோ துயரமோ இன்றி மேன்மையுற வேண்டும் என்கின்ற அடிப்படையில் பின்வரும் கட்டுரையானது அமைகின்றது. இக்கருத்துக் கருவூலம் இந்தியா என்கின்ற தனிப்பெரும் நாடு மட்டுமன்றி முன்னேறாத பிறஉலக நாடுகளும் பயனுற வேண்டும் என்கின்ற அவா மற்றும் ஆதங்கம் பேரிலும் உருஆகின்றது! இக்கரு மழலையாவதும் நிராகரிக்கப்படுவதும்   அந்தந்த நாட்டு அரசுகளின் விருப்பம் மற்றும் மக்களின் மனோபாவம் சார்ந்தது!


கட்டுரை:

            2) மானுடம் வாழும் பூமிப் பரப்புக்குள் என்ன நடைமுறைக ளெல்லாம் ஒழிக்கப்பட வேண்டும் என்று எண்ணுகிறீகளோ அவற்றையெல்லாம் பட்டியலிடுங்கள். அவ்வாறான பட்டியலுக் குள் அநேகமாக இலஞ்சமும் ஊழல்களும் (கையூட்டுக்கள் பெறுவதும், தருவதும்) என்பதானது முதலாவதாக இடம்பெறக் கூடும். அந்தப்படிக்கு பட்டியலுக்குள் இடம் பெற்றிடும் அனைத்தும், அடுத்துவரும் பத்தியில் தெரிவித்திட்டபடி தகவல்கள் நடைமுறையில் அமுலுக்கு வரும் நாளிலிருந்து மூன்று ஆண்டுகட்குள் யாவும் களையப்பட்டுவிடும் என்பதானது ஒட்டுமொத்த மக்களின் நலம் மற்றும் ஒற்றுமையை ஏற்படுத்துதல் என்கின்ற அடிப்படையில் முறையே ஆய்வுச் செய்கையில் உறுதிப்படும்.

 
             3)  சமீபத்திய என்னுடைய *கவிதை ஒன்றில் பின்வருமாறு தகவல் தரப்பட்டுள்ளது:

          *குடும்பத் தேவைக்கேற்ப  நிலபுலங்கள்  
                               சொத்து உரிமைக்கும் உச்ச வரம்புகண்டு,
                  கொள்ளுப் பேரர் காலம் முடியும் மட்டும்    
                               செல்லும் வரம்புஎன்று  விதிகள் கொண்டு,
                   அனைவர்கும் கல்விவேலை  வீடுகள்போன்று மருத்துவ
                              அவசியமும், வழங்க அரசுகள் உரிய  சட்டம்கொணர,


        -- என்று உள்ள இக்கவிதையில் தெரியவருகிறபடி குடும்பத் தேவைக்கேற்ப   சொத்துக்கு உச்சவரம்பு அரசுகளால் நிர்ணயிக்கப் படுகிறபோது அவ்வாறு நிர்ணயிக்கும் உச்சவரம்புக்கு மேல் உபரியாக அறியப்படும் தனியார் உடமைகளை (அதிகப்படியான சொத்துக்களை) அரசு தன்வசப் படுத்திக்கொள்ளுமா என்றால் பின்தொடரும் தகவல்கள்படிக்கு சுமார் ஒருவருட காலத்திற்கு அதற்கு அவசியமே ஏற்பட வில்லை.

     4)  மேற்குறிப்பிட்டவாறு நிர்ணய வரம்புக்கு மேல் மிகுதியாக உள்ள சொத்துக்களை, சொத்துக்கள் மற்றும் உடமைகளின் உரிமையாளர் தன்னுடைய விருப்பப்படியும் முடிவுப்படியும் அவர்களாகவே மேற்படி நிர்ணய வரம்புக்குள் சொத்து இல்லாத சகோதர சகோதரிகள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள், முதியோர் இல்லங்கள், மேலும் உறவினர் இன்றி அலைகின்ற அனாதைகள் மற்றும் பிச்சை எடுத்து உயிர் வாழ்கின்றவர்கள் என்று எவருக்கும் (மனிதநேயம் அடிப்படையில்) தானமாக மற்றும் இனாமாகத் பகிர்ந்தளித்திடலாம் அல்லது வேறொருவருக்கு மொத்தமாகத் தரலாம் என்பதற்கு, தனியொரு நபருக்கும் மற்றும் அனைவருக்கும் உரிமையளிக்கப்படுகிறது. ஆனால், இது அதிகபட்சமாக ஒரு வருட காலத்திற்குள் நிகழ்ந்தாக வேண்டும்.


      5) எனவே சொத்து உச்சவரம்பு நிர்ணயச் சட்டம் சம்பந்தபட்ட அரசுகளால் நிறைவேற்றப்பட்ட நாளிலிருந்து அதிகபட்சமாக ஒரு வருட காலம் முடியும் வரை தனியார் எவருடைய சொத்தையும் மற்றும் நிறுவனங்கள் உடமைகளையும் அரசு கையகப்படுத்தாது. அதனால் பொதுவுடமைச் சித்தாந்தம் இக்கருத்துக் கருவூலங்கட்கு சற்றும் பொருந்தாது என்பதும் இங்கே அறிவிப்பாக வெளியிடப்படுகிறது. பொதுவுடமை சித்தாந்தம் ஏழைப் பணக்காரன் பாகுபாடுகளைக் களையமுற்படுவது. நமது கருத்துக்கள் அனைவருக்கும் சொத்துரிமை  சமஅளவில்  துய்க்கப்பட முறையே அனுமதித்துச் செயற்படுவது.

                                                     
    6) அடுத்தபடியாக சொத்து உச்சவரம்பு அளவானது எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?  இந்த வினாவுக்கான பதில் பின் வருமாறு:

       7) முதலாவதாக தனிஒரு குடும்பத்துக்கு மற்றும் குடும்ப உபயோகத்திற்கு அவசியமானவை எவை என்பதுப்பற்றி அறிய முற்படுவோம்.

       (1) குடும்ப உபயோகத்துக்கு சுமார் ஒரு ஏக்கர் நிலம்; அந்நிலத்தில் சுமார் அரை ஏக்கர் மிகாமல் ஒரு வசிப்பிடம் (அனைத்து வசதிகளுடன் கூடியது) (2) குடும்ப உறுப்பினர்கள் பதினெட்டு வயதைத் தாண்டிட்ட ஒவ்வொருக்கும் மனித நேயத்துடன் கல்வி ஆதாரத்தில் வேலை; (3)  தேவைக்கேற்ற சம்பளம்;   (4) குடும்ப உபயோகத்துக்கு இரண்டு குளிர்வுந்து (கார்கள்) (5) உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் விசையுந்து  (Bikes) மற்றும் மிதியுந்து (சைக்கிள்கள்) (6) ஒவ்வொரு குடும்பம்பத்தினருக்கும் மகளிர் உபயோகத்துக்கு மற்றும் பிற அவசரத் தேவைகட்கு ஒரு நூறு பவுன்களுக்கு மேற்படாமல் பிளாட்டினம் தங்கம் வெள்ளி நகைகள்; (7) கல்வி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புக்களில் (கல்வி துவக்கநிலை முதலாக) யார் எந்த அளவுக்கு கற்க விரும்புகின்றார்களோ படிப்புகாலம் முழுமைக்கும் படிப்புச் சார்ந்த செலவுகள் அனைத்தும்; மற்றும் ஆற்றல் ஆதாரங்களில் அனைவருக்கும் அரசு ஏற்பாட்டில் (வெளிநாடுகளில் உயர்படிப்பு உட்பட) இலவசம்; (8) எல்லோர்க்கும் அவ்வப்போது அல்லது எப்போதாவது அல்லது  நிரந்தரமாக ஏற்படுகின்ற உடல்நலம் குறைவு (நோய்) எத்தகையதாக இருப்பினும் பாகுப்பாடு ஏதுமற்ற மருத்துவம்; மற்றும் அக்காலங்களில் உணவு உடை அறைகள்வசதி அரசு பொருப்பில் முற்றுமாக இலவசம்; (9) குடியிருப்புப் பகுதியிலிருந்து அவரவர் பணியிடங்களுக்கு பணியாளர்கட்கும்; அவ்வாறே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் சென்றுவர மாணவர்கட்கும் (கார்பயணம் தவிர்போருக்கு) பேருந்து மற்றும் ஊருந்து (ஆட்டோ) போகவரப் பயணம் இலவசம்; என்கின்ற திடதிட்டங்கள் மற்றும் கொள்கைகள் பேரில் ஒரு அரசானது செயற்படுமாறு அமையப் பெறுமானால்... இப்போது தெரிவியுங்கள்... மேற்கொண்டு அவசியமானதாக ஒவ்வொரு குடும்பத்துக்கும்  வேறு என்ன வாழ்நாட்களில் இருக்கமுடியும்.


          8) அந்தப்படிக்கு ஒரு குடும்பத்தினர் அடிப்படை அவசியங்க ளான -

1)       சுமார் ஒரு ஏக்கர் நிலம்; அரை ஏக்கரில் ஒரு வசிப்பிடம்
          (அனைத்து வசதிகளுடனும் கூடியது)

2)       குடும்ப உபயோகத்துக்கு இரண்டு கார்கள்;

3)       உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பைக் மற்றும்
          சைக்கிள்கள்

4)       குடும்ப மகளிர் உபயோகத்துக்காகவும் மற்றும் குடும்பத்தினர்
          அவசரத் தேவைகட்காகவும்  ஒரு நூறு  பவுன்களுக்கு மேற்
     படாமல்  பிளாட்டினம் தங்கம் வெள்ளி நகைகள்;
         

-- என்று தனியாரது குடும்ப உபயோகத்துக்கு சொத்து உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்படலாம்.


         9)    மேற்குறிப்பிட்டவாறு சொத்துக்களை அனுபவிக்கும் எல்லை யானது அனைவருக்கும் பொதுவாக மற்றும் சமமாக ஒரு வரம்புக்குள் அடங்கிடும்போது பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மக்களிடையே தானாக மறையும்; போலி ஆர்ப்பாட்டங்களும் பொருளாதார வீணடிப்புக்களும் தேவையற்றது என்று மக்களே முடிவுசெய்திடும் நிலைமையும் எதிர்காலத்தில் உருவாகிடும் என்பது நிச்சயம்.



 *முழுக்கவிதையும் படிக்க

   (தீண்டு):   கலகம் விலகி நலம் பெற... உலகம்
 

  Click also:
  Reservation in EducationJobs etc.
  - A new doctrine on professionally basis


  Click also:
   Next  Reservation in EducationJobs etc. - A new doctrine on professionally basis

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக