சூன்யம் என்பது என்ன? வெறுமை! அதாவது….
காற்று உட்பட எதுவும் இல்லாத வெற்றிடம்!
பள்ளி சூன்யம் என்பது பின்ஓர்நாளில்...
பில்லி சூன்யம் என்று மாற்றப்பட்டது!
பில்லி பொய்... பேய்என்று , அந்நாளில்
ஓதுபறையன் செப்ப… அதுஊழல்ஆயிற்று!
கண்ணன்ஓர் கடவுள் என்றால் அவனொரு
கணையால் மாண்டிட்ட காரணம் ஏன்?
இராமன் என்பவன் இறைவன் என்றால்
ஆற்றில் விழுந்துஉயிர் விட்டது ஏன்?
ஈசன் என்பவன் தெய்வம்தான் என்றால்
எங்கேஅவன் சென்றான் விவரம் பறைவீர்
உயிரைக் கொடுத்து உயிரை எடுக்கஎமனாம்!
எமனைப் படைத்தவன் ஆண்டனோ?
கயிறைக் கொடுத்துஅக் காலனை அனுப்பிட்ட
கடவுள் எவனா னாலும் கற்பனையே!
ஆணும் பெண்ணும் வேணுமே உருவாக
விந்துமுட்டையே!
பேணபெண் வயிறு வேணுமே பிரசவிக்க
மழலையே!
ஊணும் நீரும் வேணுமே உயிர்வளர
பெண்உடலுளே!
ஆகினாய்உன் தகப்பனால் ஆராதிக்கின்றாய்
ஏன் வெறுமையை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக