பக்கங்கள்

பக்கங்கள்

வியாழன், 10 ஏப்ரல், 2014

இவற்றுள் எந்த ஊழலைத்தான்  நிர்மூலம் ஆக்கிடுவார் இவர்?

அறிவியல் ஆதாரத்தில்,
நிரூபனம் ஆகாத போது;
உயிரனைத்தும்...
ஆண்டவனே படைத்ததாக,
ஓதுவது ஊழல்!

இவன் இவன் இன்ன இன்ன,
சாதியைச் சார்ந்தவன் என்று;
வாழும் நிலைமையை,
ஆண்டவன்...
தலைஎழுத்து என்றும்...

ஒருப் பெரும் மக்கட் பகுதியை,
சுதந்திரம்-சுகம், தீண்டா...
மத அடிமைகளாய்,
புறக்கணிப்பது ஊழல்!

வகுப்புவாரியாக அரசுகள், அமைந்திடாதவாறு;
உரிமைகள்...
இருந்திடும்போது;

மக்கள் ஒற்றுமை,
சுதந்திரம் மரபுகள் விலகி,
தேச வலிமைப் பற்று இல்லாது...

அரசியல் கட்சிகளுக்குள்,
மதம் - வகுப்பு அடிப்படையில்;
வேட்பாளர்களை...
நிறுத்துவது ஊழல்!

பணிஆர்வம் மற்றும் அறிவு,
தகுதி, திறமை -
இவைகட்கு
அப்பாற்ப்பட்டு...

மத சாதி மனோவியாதி...
பேதங்களை ஊதி... ஓதி,
ஓட்டுக்கள் பெற முற்படுவது;
மக்கள் ஒற்றுமைக்கு எதிரான,
தேச விரோத ஊழல்!

இவற்றுள்  எல்லா
ஊழல்களையும்
நிர்மூலம்
ஆக்கிடுவாரோ இவர்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக