சனி, 21 மார்ச், 2015

கங்​கை​யே வா! காவிரி​போல் தமிழகம்தழுவி மகிழடி!





  Photo:   da สุดา


என்ன திமிரிருந்தால் ஈசன்சடை மீதுஏறி,
சின்னவீடு அன்ன சிரித்தபடி கூடுகட்டி;
இன்றும் களித்திருப்பாய் எங்கேஉன் நாகரிகம்?
கங்கையே தெனஇந்தியா  கா!

கண்ணன் தஙகச்சியாம் கணவன்சிவன் டைமுடியுள்,
வெள்ள கோலத்தில் விளையாடும் கங்கையேஉன்,
கள்ளக் கலவிவிட்டு காஞ்சிப்பெண் துயர்களைய...
உள்ளத் தூய்மையுடன் உடன்வா தமிழக​​மே!

இந்தியா என்பதோ எல்லோர்கும் சொந்தமடி!
கங்கைஉன் பாவம் கழுவிடுவாள் தென்குமரியடி!
எங்கள் காவிரியின் இளநகைகாண் வாஅடி!
சங்கமம் ஆகிநீ தமிழ்மொழியை கற்றிடடி!

சிங்கமுகனாம் அவன்தங்கை சீறிஎழும் முன்னேநீ,
கஙகைசம வெளித்தாண்டி காவியோடு கலந்திடடி;
பங்கம் ஆகிடாதே பாரதம்பெண் நாணம்காநீ;
தஞ்சைக் காவிரிபோல் தமிழகம்தழுவி மகிழடி!

சிவனின் சிரசுவிட்டு 'சிவனே' எனநீ இறங்கி,
கவலைப் படும்படிக்கு கடலோடு நீஅழியும்;
தவற்றை இனித்தவிர்ப்பாய் தவழ்ந்திடும் காவிரிப்பெண்,
உவகைப்புரிய நடனமாடு! ஒற்றுமைகா குமரியொடு!

 
                       Photo : James Clair Lewis


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக