சனி, 28 மார்ச், 2015

தமிழக விவசாயிகள் உரி​மை​யை அபகரிக்கும், அறிவிய​லே!

 
என் தமிழக ச​கோதர கர்னாடக​மே!
நீ எம்மோடு சண்​டையிட்டு,
பங்காளி ஆக முற்பட்டது எப்​போது?

இந்திய இருமாநிலங்கள் ஒற்று​மைக்கு,                                                                            ஊறு வி​ளையும் என்று ​​தெரிந்தும்;
காவிரியி​ன் சுதந்திரத்​தை
கவ​லைப்படாமல் கடத்துகிறவ​னே!

தமிழக விவசாயிகள் உரி​மை​யை
அபகரிக்கும், அறிவிய​லே!                                                                                                                                                                                                                உனக்குள் செயற்கையாய்
ஓர் பிரிவி​னை கிருமி [வைரஸ்]
சுனாமி அன்ன புகுந்திட்டது... எப்படி?

பாற்கடலுள் அசுரர் இணைந்து கடைந்திட,
தேர் அன்ன உருண்டு அ​சைந்திட்டதாம்;
வெண்ணெய்!                                                                                                                
அது, அசுரர்உண்ண உரி​மை இல்​லையாம்!

தேவாஅமிர்தம் என்று அதற்கு பெயராம்!
புரளியை கிளப்பிட்டவன்;
மானுட நாகரிகத்தை,
புரட்டிட்டது போல்... உன்னை,
தீமைகள் நோக்கி நகர்த்திட்டவன் எவன்?

உலகமே! அதிரும்படிக்கு...
அணுகுண்டுகள் பல நூறுகளில் வெடித்து,
ஆதிக்க சோதனைகள் நிகழ்த்தி

உயிகள் பலநூறு கோடிகள்
இறந்துபட... ஆக்கிட்ட
ஆதிக்கவெறிச் சிந்தனையாளனோ?

மண்டை ஓட்டுக்குள் பதுக்கிட்ட மூளையை,
அன்பால் இந்தியர் என்று;
ஒரே  மானுடமாய், மக்களாய்
பூர்வக் குடியினரோடு, ஒன்றாமல்;

மதத்தால், சாதிகளால்,  
ஒற்றுமைக் கொல்லும், மனு[ஸ்]
அதர்ம மிருதி... உதிரம் உரிஞ்சிடும்
ஒட்டுண்ணிகளாய்;
பேதமனோ வியாதி கிருமிகளாய்

அன்றாடம் பலநூறு கோடி
கி​லோ வெண்ணையை,
எரிஅடுப்பில் உருக்கி,
உலக நன்மைக்காக என்பதாக,
பொய்யுரைத்து;
அதற்குப் பேர் (தீ)யாகமாம்

நெருப்பு அனப்புக்குள் கருக்கி, வீணடித்து;                        வேற்றுமை ஓதி.,.. பல நூறு சாதிகளாக;
   மானுடம் சிதைய உடைத்திட்டவனோ?
       
      




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக