பக்கங்கள்

பக்கங்கள்

வியாழன், 14 மே, 2015

சாதிமனப் புண்ணடா சாமி சடங்கு சீழடா!

 Photo :  Radoslav Dejanović

தெய்என் றால்கொலை! தெளி... 
     தெய்வம், கொலைசெய் மிருகம்!

இறை,திரை வரியே! இறைவன், 
     வரிவசூல் அதிபதி, அரசன்!

ஆண்டவன் என்பான், இம்மண்... 
     ஆண்டு செத்திட்ட மன்னன்!

கடவம் என்ப​தோ...  நாடு, கேடயம், 
     போர்படை; என்றுஆக...

கடவுளும். வேந்தனே!  இல்லைஎங்கும் 
     நீபறையும் கடவுளே

பொறிப்போல் கொறிக்கவே போடா; உன்தெய்வம்!
அரிக்கும் இலைப்புழுவே! ஆடாதே மேலும்;
எரிமலையைத் தீய்க்க எறியாதே பந்தம்;
வறியோர் வறுமை அகற்று!

ஈன சாதி தோன்றவே இறந்து வாய்மைப் பட்டதே!
ஆனநீதி யாவையும் அழிந்து போக லானதே!
ஊண ஓதல் யாகத்துள்மதி ஊணமுற்ற மனிதனே!
காணநீதி நாட்டுள்ளே கருக வேணும் பேதஅம்ச​மே!

சாதிசொறிப் புண்ணடா  சாமி சடங்கு சீழடா!
ஓதி ஏய்க்கும் ஊழன் இங்குபேத நோய்ப ரப்பும் ஈயடா!
நீதி நேர்மை உயிர்பெற நீயும் நானும் தானடா!

சாதி விலகி ஒன்றிவாழும் சரித்திரத்தை காணடா!

மேலும் படி: 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக