Many in India’s literary community are disgusted. Dozens
of writers say every day brings more evidence of intole-
rance and bigotry going mainstream — a man

சாதி மனநோயனே!
சமயநிற முரடனே!
சாவு உன்னை வந்துற பிணமே
என்ற நிலைமையே!
ஆதி குரங்குஉரு மாறியே
மனிதன் என்று ஆயிற்றே!
ஆகாய சுழற்றும் சுழலுள்ளே...
யாவும் மடியும் முடிவிலே!
ஈன சாதி தோன்றவே...
இறந்து வாய்மைப் பட்டதே!
ஆனநீதி யாவையும்...
அழிந்து போக லானதே!
ஊண ஓதல் யாகத் துள்மதி
ஊண முற்ற மனிதனே!
காணநீதி நாட்டுள்ளே விலகிடு;
பேதமத அம்சமே!
சாதி மனப்புண் ணடாச
டங்கு சாமி சீழடா!
ஓதிஏய்க்கும் உளுத்த ரிங்கு
பேத நோய்ப ரப்பும் ஈயடா!
நீதி நேர்மை உயிர்பெற
நீயும் நானும் தானடா!
சாதி விலகி ஒன்றிவாழும்
சரித்தி ரத்தைக் காணடா!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக