ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

மாட்டுத்தோல் செருப்பணிந்து நடப்பது பாவம் இல்லையோ?


   Photo: Claudia Tan

ஆரியன் தவறுகள் புரிகிறதாக அகலவாய்;
      மகிழ்கின்றீர்!
கூறுப்பட்ட சாதிசொல்லி கொக்கரிப்புள்-
      நு​ழைகிறீர்!
ஆறுதல்பட பகுத்தறிவுஇல்  ஆண்டவனையும் 
      பிளந்திட்டீர்!
ஆறறிவு என்கின்றீர்! அறிவில் மூளை   
      ஒற்று​மைப்பட அறிகிலீர்!

ஊடுருவி மண்ணுள் ஆரியன் உருட்டிவிட்ட மதத்துள்ளே...
ஆடுகொன்று  இறைச்சி உண்ணஅது புனித மாகுமோ?                            
கோடுபோட்டு வருணபேத பாடைஏறும் சாதிபி ணங்களே!
மாட்டுத்தோல் செருப்பணிந்து நடப்பது பாவம் இல்லையோ?

சனி, 2 ஏப்ரல், 2016

வெல்ல நிலவை! கண்டு முகில்களும்; பின்னல் செய்து...

 
   Photo:   Sarah Michelle Gellar-Prinze
                                    OWNER

மூடிடும் பனிமுகில் சிகரம் தழுவல் அல்லவே! 
மூடிடாது துகில் என்னை வலுவில் விலகிடுமோ?                                 
ஆடிடும் கொடியிடைப்  பூஇலை கனிகள் இரண்டும்;
நாடிட வண்டுக்கு! நானும் அதுபோல் திணருகின்றேன்!
ஊடிடும் என்நாணம், நெகிழ்ந்தோட! மேல்வானம்;
பாடிடநீ மனம்உருகி முனகிடஅப் பாட்டு; கேட்டு!
வாடிடுதே பாவைகாதல்! தாண்டிடுஉன் சாதிக்கோடு!

விண்ணைத் தொடுமோஇம் மங்கை,
மேனிமேல் நிலைகொண்டகாத​ல்?
குன்றுகளாய் புடைத் தனகாண்! குமரி 
அந்த ரங்கபோர் தளத்துள்;  இடித்து- 
                                
மின்னல் செய்யும் அன்பில்! - ​மெல்ல!
வெல்ல நிலவை; கண்டு முகில்களும்;
பின்னல் செய்து மழைக்கின்ற னவே!இப்
பெண்ணும் கிறங்க ஏதாவது நீசெய்!