திங்கள், 1 ஜூன், 2015

தங்​கையின் குழந்​தை பெரியவன் ஆகி மாமன் கம்ச​னைக் ​கொல்வான் ​சோதிடம் ஓர் ஊழல்!



   Photo :   Sandhya Rani



 
தன்னு​டைய தங்​கைக்கு பிறக்கின்ற குழந்​தை வளர்ந்து
​பெரியவனானால் மாமன் கம்ச​னைக் ​கொள்வான்
என்பதாக ​சோதிடம் இருந்திட்டதாக வதந்தி ஓர் ஊழல்!
                                                                                                                       
[இதனால் குழந்​தை ஏசு பிறந்தால் உடன் ​கொல்ல ​வேண்டும்
என்ற ஏ​ரோது மன்னனின் வரலாறு கம்சன் ​தொடர்பான
கதையில் கற்ப​னையாக நு​ழைந்துற்றது என்கின்ற வஞ்சகம் ​
வெளி உலகுக்கு ​தெரியாமற் ​போயிற்று!]

கம்சன் ​கொடு​மை மதியாளனாக இருந்திருக்கும் பட்சத்தில்
தன்னு​டைய தங்​கையின் எட்டாவது ​மைந்தன் ​பெரியவனாகி
தன்​னை ​கொல்வான் என்ப​தை நம்பியிருந்தானானால்
தன் உடன் பிறந்தவ​ளையும் அவளு​டைய கணவன் வாசு
​தேவ​னையும் ​கொல்ல​வே ஆ​ணைகளை வழங்கியிருப்பான்.

​அதனால் சிறுவனான கண்ண​னை கம்சன் பல சந்தர்ப்பங்களில்
​கொல்ல முற்பட்டான் என்பதானது உண்​மையற்ற வதந்தி
ஆயிற்று.  அவ்வாறு  ​பொய்யாக பரப்பிட்ட கற்ப​னைகள்
தமிழ் குடிகளி​டை​யே ​பெரும்பா​லோர் கம்சனுக்கு எதிராகவும்
கண்ணனுக்கு ஆதரவாளர்களாகவும் மாறிட்டனர்.

முதலாம் அன்னியர்களின் (​பேத வம்சத்தவரின்)
ஆதரவாளனாக கம்சனின் ​மைத்துனன் வாசு​தேவன், ​ஆரியன்
நி​லை​மையில் ​செயற்பட்ட தன்​மையால் நாடு அபகரிப்புக்
குள்ளாகிடக் கூடும் என்றும் என்று கம்சன் அஞ்சினான்!

அந்தப்படிக்கு, தம் தமிழ்குடிமக்கள் ஆரியர்களின் அடி​மை 
களாகிடும் அபாயம் ​நேரிடலாம் என்கின்ற அய்யப்பாடும்
​தோன்றிட்ட நிர்ப்பந்தத்தால் தமிழ் மாமன்னன் ​​கம்சன்
எதிரிக​ளை ஒடுக்க ​மைத்துனன் வாசு​தேவ​னுடன்
அவனுக்கு ஆதரவாக ​செயற்பட்ட  தங்​கை​யையும் ​​சேர்த்து
அன்பு காரணமாக அவர்க​ளைக் ​கொல்லாது சி​றையில​டைத்தான்.

நாடற்ற வாசு​தேவன் ஆரியனாக இருந்திட்ட நி​லை​மையால்
அவனு​டைய மகன் கண்ண​ன் ஆரியர்களின் ​பேதவம்ச அர​சை
நிருவிட முற்பட்டான்  ஆரிய அரசுகள் பாரதத்தில் நிறுவிட
படவும் மற்றும் ஆரியர் அல்லாத அரசுகளிலும் பார்ப்பனர்கள் 
மந்திரிகளாக இருந்துற்றதற்கும் கண்ணனின் ஆதரவு ​பெரிதும்  
உதவிட்டதால்ஆதியில் அவன் ஆரியர்களின் கடவுளாகினான்  
என்பது ​ சிதம்பரம் இரகசியம்அன்ன  பாதுகாக்கப்படுகிறது.

வியாழன், 14 மே, 2015

சாதிமனப் புண்ணடா சாமி சடங்கு சீழடா!

 Photo :  Radoslav Dejanović

தெய்என் றால்கொலை! தெளி... 
     தெய்வம், கொலைசெய் மிருகம்!

இறை,திரை வரியே! இறைவன், 
     வரிவசூல் அதிபதி, அரசன்!

ஆண்டவன் என்பான், இம்மண்... 
     ஆண்டு செத்திட்ட மன்னன்!

கடவம் என்ப​தோ...  நாடு, கேடயம், 
     போர்படை; என்றுஆக...

கடவுளும். வேந்தனே!  இல்லைஎங்கும் 
     நீபறையும் கடவுளே! 

பொறிப்போல் கொறிக்கவே போடா; உன்தெய்வம்!
அரிக்கும் இலைப்புழுவே! ஆடாதே மேலும்;
எரிமலையைத் தீய்க்க எறியாதே பந்தம்;
வறியோர் வறுமை அகற்று!

ஈன சாதி தோன்றவே இறந்து வாய்மைப் பட்டதே!
ஆனநீதி யாவையும் அழிந்து போக லானதே!
ஊண ஓதல் யாகத்துள்மதி ஊணமுற்ற மனிதனே!
காணநீதி நாட்டுள்ளே கருக வேணும் பேதஅம்ச​மே!

சாதிசொறிப் புண்ணடா  சாமி சடங்கு சீழடா!
ஓதி ஏய்க்கும் ஊழன் இங்குபேத நோய்ப ரப்பும் ஈயடா!
நீதி நேர்மை உயிர்பெற நீயும் நானும் தானடா!

சாதி விலகி ஒன்றிவாழும் சரித்திரத்தை காணடா!

மேலும் படி: 

வெள்ளி, 1 மே, 2015

சத்தியமே! சொல்... பொதுவுடமை, பித்தரைப் பின்பற்ற தோன்றா!






சித்தார்த்தன் செய்தாற்போல் சீர்திருத்து  பாரதத்தை,
எத்தனைநாள் பேதவம்சம் ஏய்க்கும்!

அத்தனைக்கும் காரணம் ஆண்டவன்தான் என்றிருக்க,
எத்தனைநாள் ஏமாறும் மேநாள்!

துர்மத சலத்துள்ளே தோன்றிட்ட பேத கொசுக்க ளாலே,
வர்ணசாக் கடைப்புழுக்கள் வாழும் சாதி ஈக்க ளாலே,
சாதி மோதல் கால ராக்ககள் சமய சண்டை சீத பேதி;
வீதி வீதி வேற்றுமை; மலேரி யாக்கள் தோன்றிற்றே!

படைத்தவன் பைத்தியம் பாருள் அகலாமல்;
அடைந்திடு மோ
புதுமை அண்டம்; அறிவியலால்,
மூடக்கருத்துக்கள் மூவாயிரம் நீகண்டும்,
சாடிஒழிக் காமல் தவிர்ப்பதும் மூடமே!
சத்தியமாய் சொல்வேன் சகத்துள் பொதுவுடமை...
பித்தரைப் பின்பற்ற
தோன்றா!