சனி, 28 மார்ச், 2015

அறிவே!​ போற்று தென்னாடு ஆண்ட நாகன்நந்தன், கம்சன், இராவணன்...


   Photo:   shreya bhatt

கடவுள்என்பது விசுவஉருவ கற்பனையேஎன்று விலகாமல்,
அடகண்டது  தின்றிட ஆலயத்துள் சீரணம் ஆகாமல்;
உடலம் (கொழுப்பு) உருகுதற்கு கோயிலோ, குளமோ,
மடமோ சுற்றிவந்து;  மடஆரியன் அதைப்பக்தி என்றான்!


திடமொடு அறிவியலைப் புறக்கணித்துதினம் தெய்வம்,
மடமையில் உண்டெண்றான்; மதியால் ஆயாமலே! - உன்
உட​மையாய் மதத்​தை நம்பநீ, அவனுக்கு அடி​மையானாய்!

அறிவே​! போற்று தென்னாடு ஆண்ட நாகன்நந்தன், கம்சன்,
இராவணன், ஏககலைஅவன், (இ)ரண்யன்,  நரஅசுரன்,
புத்தன்அ சோகன், புகழ்அரசி-ரசியா, ஒள​வை,வள்ளுவர்,
சித்தர்,பின் ​அம்​பேத்கர், ​பெரியார், ஒருசேர சேர்த்து!

அன்று கவிஞர்களும், அரசர்களும், 

     வனமுனிவர், அனுமன்குரங்கும்,
இன்றும் மறையாபி சாசுகளும், 

     ஏளனமாக ​தொங்கிடும் கண்திருட்டி
​பொம்​மைமூல அரக்கரும்,  

     காடும​லைகளில் அ​லைந்திட்ட சித்தர்களும்,
நம்முன்னாள் ​மானுட​மே! அவ்வா​ழையடி 

     வா​ழை உறவுகள் ​போற்று!
​தெய்வபுரட்டுக​ளை  விலகிஉன் வாரிசுக​ள் 

     சுதந்திரத்​தைக் காப்பாற்று!

அன்னியன் சாதி​கொள்​கை ஆராயா மல்ஏற்று,
பின்பற்றும் நாள்வ​ரை ​​​​பேசும் சுதந்திரம்,
மண்ணு​​லே உ​ழைப்​போர்க்கு எங்​கே? மட​மையால்,

கொன்றிடும் பேதவம்ச குற்றமதம் என்றுமே...
நன்குஅறிஉன் நாட்டுக்(கு) எதிரி! 


மாயன் மகளாய் மகள்மாயி ஆகியும் (கருமாரி)
பேயாய் உன்​னைப் பிரித்​தோ துவோர்கும்;
ஓயா பிணி​க​ளெலாம் ஓடநன்​மை செய்தாயாம்!
சாயாசதி சாதிகளை மாய்!

தமிழக விவசாயிகள் உரி​மை​யை அபகரிக்கும், அறிவிய​லே!

 
என் தமிழக ச​கோதர கர்னாடக​மே!
நீ எம்மோடு சண்​டையிட்டு,
பங்காளி ஆக முற்பட்டது எப்​போது?

இந்திய இருமாநிலங்கள் ஒற்று​மைக்கு,                                                                            ஊறு வி​ளையும் என்று ​​தெரிந்தும்;
காவிரியி​ன் சுதந்திரத்​தை
கவ​லைப்படாமல் கடத்துகிறவ​னே!

தமிழக விவசாயிகள் உரி​மை​யை
அபகரிக்கும், அறிவிய​லே!                                                                                                                                                                                                                உனக்குள் செயற்கையாய்
ஓர் பிரிவி​னை கிருமி [வைரஸ்]
சுனாமி அன்ன புகுந்திட்டது... எப்படி?

பாற்கடலுள் அசுரர் இணைந்து கடைந்திட,
தேர் அன்ன உருண்டு அ​சைந்திட்டதாம்;
வெண்ணெய்!                                                                                                                
அது, அசுரர்உண்ண உரி​மை இல்​லையாம்!

தேவாஅமிர்தம் என்று அதற்கு பெயராம்!
புரளியை கிளப்பிட்டவன்;
மானுட நாகரிகத்தை,
புரட்டிட்டது போல்... உன்னை,
தீமைகள் நோக்கி நகர்த்திட்டவன் எவன்?

உலகமே! அதிரும்படிக்கு...
அணுகுண்டுகள் பல நூறுகளில் வெடித்து,
ஆதிக்க சோதனைகள் நிகழ்த்தி

உயிகள் பலநூறு கோடிகள்
இறந்துபட... ஆக்கிட்ட
ஆதிக்கவெறிச் சிந்தனையாளனோ?

மண்டை ஓட்டுக்குள் பதுக்கிட்ட மூளையை,
அன்பால் இந்தியர் என்று;
ஒரே  மானுடமாய், மக்களாய்
பூர்வக் குடியினரோடு, ஒன்றாமல்;

மதத்தால், சாதிகளால்,  
ஒற்றுமைக் கொல்லும், மனு[ஸ்]
அதர்ம மிருதி... உதிரம் உரிஞ்சிடும்
ஒட்டுண்ணிகளாய்;
பேதமனோ வியாதி கிருமிகளாய்

அன்றாடம் பலநூறு கோடி
கி​லோ வெண்ணையை,
எரிஅடுப்பில் உருக்கி,
உலக நன்மைக்காக என்பதாக,
பொய்யுரைத்து;
அதற்குப் பேர் (தீ)யாகமாம்

நெருப்பு அனப்புக்குள் கருக்கி, வீணடித்து;                        வேற்றுமை ஓதி.,.. பல நூறு சாதிகளாக;
   மானுடம் சிதைய உடைத்திட்டவனோ?
       
      




செவ்வாய், 24 மார்ச், 2015

இராவணன் தீயசக்தியோ ஒழுக்கம் கடைப்பிடித்த கற்பரசன்!



 



சீதைமேல் இராவணனுக்கு காமமோ காதலோஇல்லை!
ஆதாரம் அறிவீர்; இராவணனுக்கோர் சாபம் உண்டாம்!
 
கதைப்படி துடைகள்மேல் வைத்து தூக்கிச் சென்றும் சீதையை!
இராவணனுக்கு தலைவெடித்து சாபப்படி சிதறாநடைமுறையில்...
இராவணன் தீயசக்தியோ? ஒழுக்கம் கடைப்பிடித்த கற்பரசன்!
இதனாற்றான் சீதைநெருப்புள் இறங்கியும்உயிர் மரிக்கவில்லை!

பாரததத்தை இராமனின் செருப்புக்கள் ஆண்டதாய்...
ஆறாம் அறிவைவிலகி இந்தியமக்களை அவமதித்து;
தாரமாய் தசரதனின் முதலாம் பட்டத்து இராணி ஈன்றதால்,

ஆளும் உரிமை நூறுசதம் பெற்றவன் பரதனை அடிமையாக்கி;
காணுள் வாழ்ந்த வனக்குரங்கு துணையொடு அத்தீயசக்தி...

பொல்லாதோன் இராமனே என்று புரிந்திடா குரங்குகளால்...
புளுகுகளொடு
வன்கொடுமைகளை தெய்வவரலாறு எனபரப்பி;
கல்லை சிலையாக்கியோனும் மனிதனே என்றிருக்கையில்;
கல்செம்புச் சிலைதொழுது செருப்புகள் ஆள மடிகின்றார்கள்!





இரண்டாம் தாரமாம் தசரதனுக்கு! கைபர் போலன்...
கணவாய்கள் வழிவந்த முதலாம் அன்னியப் பெண்ணுக்கு,
பிறந்தவன் பாரதம் ஆண்டவனாமே? [அப்படியானால்]


இராஜீவ் காந்தியை மணந்து
ஆளும் ரிமைப் பெற்றிட்ட,
அந்நாள் பிரதமர் இராஜீவ் காந்தி மனவி திருமதி சோனியாகாந்தி அவர்களை அன்று அரசமைப்பு சாசனம் அனுமதித்தும்; 

இந்தியாவை  ஆள விடாது பேதவம்சங்கள் தடுதிட்டன! ஏன்
 
நல்லவர்போல் எப்போதும் தம்மைக்காட்டிக் கொள்பவர்கள் [
நியாயமாய்]
வஞ்சகமாய் சாதிஓதி ! நன்மை அதுதான்என்றுச் சுரண்டல்செய்து,
எல்லோரையும் இன்னும் எத்தனை வருடங்கள் தொடர்ந்து...
ஏமாற்றி இந்தியமண்ணை ஆண்டு மறைவாரோ; என்அறிவே!