வெள்ளி, 18 ஏப்ரல், 2014

ஆண்டவனை  நம்பென  ஓதும் கற்பனை சூன்யமே!

சூன்யமே!

இது திருவள்ளுவர் ஆண்டு,
இரண்டாயிரத்து 23*

மனிதன்...

கிரகம் விட்டுக் கிரகம்,
செல்லும்...
அறிவியல் யுகம்!

பூமியை விலகி செவ்வாயில்,
குடியேற...
பயணிக்கும்  காலம்!

அணுவின் பரிணாம...
வளர்ச்சியே!

தாயின் கருவறைக்குள்
சூழ் ஆனால் [எவ் உயிருக்கும்]
பிறப்பு!
இல்லையென்றால் சூன்யம்!

[ சூன்யம்... தாய் தந்தை
யார் என்ற தகவல் உட்பட
உறவு ஊர் நாடு மதம்;
எதுவுமே தெரியாத வெறுமை]

சீவன்   [விந்தணு
தொட   [பெண்ணின்...              
                    கருமுட்டையைத்
                    துளைக்க]

உடலை...
[ஆண் அணு-கருமுட்டைச்
சேர்க்கையை]

சிவம் என்கின்றோம்!

சாவு வர [இயங்காமை நிகழ]
அதையே...
சவம் என்கின்றோம்!

தின்றாலே சிவம்!
உண்ண இல்லையேல்,
சவம்!

பத்து நாட்கள் பட்டினி கிட...
உன் அங்கத்தில்,
எதுவுமே அசையாதே!

மானுட ஊனமே!
அன்பை, தேச ஒற்றுமையை...
சிதைத்து எதற்கு பேதவெறி?மனிதரை...
மாய்க்கவோ உன்மதம்?

* பாபர் மசூதி தகர்க்கப்பட்ட
   நாளிலஎழுதிட்டது!
   இன்றைக்கும்  பொருந்து
   கின்றது!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக