வெள்ளி, 18 ஏப்ரல், 2014

என் இமய எழுத்துகட்கு விலங்கிட...

அறிவியல் அறிவே!

என் இமைய எழுத்துகட்கு,
விலங்கிட...
ஒரு சமய செவ்வெறும்பு; சபதமிடுகிறது!

என் அன்பு உணர்வுகட்கு,
ஆற்றல்... மை;
உள்ளத்தில்...
ஊற்றெடுக்கின்றது!

அறிவியல் இயற்றல் திறன்,
மூளையில் இருந்து...
உற்பத்தி ஆகின்றது!

அதனால்...
என் எழுதுகோல்,
`வேற்றுமை' மை சாராது!

ஒற்றுமை வேட்க்கைக்குள்,
ஒன்றிட்டதால்...
ஒரு நாளும் சோராது!

அன்புச் செறிவுக்குள்,
ஆசை சரிவுக்குள்;
முடங்கும்...
முயங்கி நொறுங்கும்!

என் நெருப்பு எழுத்துகட்கு,
மை... மூளையுள் -
பசிபிக் பெருங்கடல் அன்ன,
தேங்கி அலை மோதுகின்றது!

என் எழுதுகோல் மூடியை,
மூட... மூடாது கிட... என்று,
வெருமனே வைக்க;
முடிவெடுக்கும் தகுதி,
உரிமை;
எனக்கே உள்ளது!

என் உரிமை... அது எங்கே,
இருக்கின்றது?
அறிவியல்... தினகரன்
கருவறைக்குள்;
எரிமலை குழம்பாய்...
சுழன்று கொண்டிருக்கின்றது!

வில்ஸ் வேர்ட்ஸ் எம்
ஒற்றுமை உலகத்தைக்
காண... இதோ,
புறப்பட்டுவிட்டது!








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக