வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

தினசரிநாள்குறிப்பு ஏட்டிலே, ஓர்தாள்நீ...

https://plus.google.com/u/0/app/basic/stream/

பிறந்தநாள் என்கின்றீர்! மூலநாள்,
எ .•.து அறிவீரோ?

பரந்தஇப் பூமியின், தோன்றல்...
நாள்(தான்)அதன்  மூலமே!

இறந்தநாள்அடைந்தபின் நினைவில்,
வாழ்ந்தநாட்கள் இருக்குமோ?

பிறந்தநாள்,  இறந்தநாள்... 
என்று கொண்டாட்டங்கள்;  
(பேதம்) ஓதுவோன்...
ஒவ்வொரு நாளும் சுரண்டவே!

[2]

தினசரி நாள்குறிப்பு ஏட்டிலே,
ஓர்தாள்நீ...
கிழித்திடும் நிலைமைப்போல்;

தினமும்உன் உயிர்வாழ் நாளிலே, 
ஓர்நாள்...
கழிந்திடும் நிர்ப்பந்தத்தில்;

மனிதருள் மதத்தைப் புதைத்து, பேதம்ஓதி...
பணம்பறிக்கும் ஊழல்கள்!

பிணமாய்ச் சரிந்திடும் நாளிலே,
நாட்காட்டி(ச்)...
சுரண்டலைச் செய்திடுமோ?


http://willsinunityworld.blogspot.in/2014/08/blog-post_49.html?m=0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக