திங்கள், 18 ஆகஸ்ட், 2014

என், வளையா வானமே!

https://plus.google.com/u/0/app/basic/stream/

என் -
வளையா வானமே!

இங்கே –
ஏப்ரல்-மே சூரியனின், அல்ட்ராவயலட்...
பூமி உயிர்களை,
பயிர்களை, வயல்களை,
சுற்றி எரிக்கும்;
முனைப்பில்...
எரிமலை,
ஆறுபோல்பாய..

நீயோ –
உன் உலகமாக,
என்னைக்
காப்பாற்ற முற்படாமல்;
காற்று மண்டலத்தைத்
தொற்றிக்கொண்டு...
அங்கிருந்து,
நோக்குகின்றாயே!

தென்றல், வரும் திசை...
எதுவென்று
தெரிவிக்கும்
ஆனமோ மீட்டர்...
உன் கண்கள்
என்னைத் தீண்ட
தொடும் திக்கை
அறிவிக்க வேண்டுமே!

காற்றின் அழுத்தத்தை,
கணக்கிடும்...
பாரோ மீட்டரும்,
ஆவல் கொள்ளும்;
உன்...
நெருக்கத்தின்,
இருக்கத்தை...
நான் அளந்தறிந்திட, 
உதவுமோ?


Read more [Click > URL]
http://willsindiaswillsword.blogspot.in/2013/03/blog-post.html?m=1

http://willsinunityworld.blogspot.in/2014/08/is-bjp-ready-to-remove-slavery-system_18.html?m=0


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக