ஞாயிறு, 20 டிசம்பர், 2015

எங்கும் இல்லா இ​றைவ​னை; நாடி நா​டெங்கிலும்...

Embedded image permalink
 



கண்ணன்ஓர் கடவுள் என்றால் அவ​​னொரு

க​ணையால் மாண்டிட்ட காரணம் ஏன்?


இராமன் என்பவன் இ​றைவன் என்றால்
ஆற்றில் விழுந்துஉயிர் விட்டது ஏன்?                                                 

ஈசன் என்பவன் ​தெய்வம்தான் என்றால்
எங்​கேஅவன் ​சென்றான் விவரம் ப​றைவீர்

உயி​ரைக் ​கொடுத்து உயி​ரை எடுக்க
எம​னாம்! எம​னைப் ப​டைத்தவன்  ஆண்ட​னோ?

கயி​​றைக் ​​கொடுத்துஅக் கால​னை அனுப்பிட்ட
தாய்ச்​செப்பும் கடவுள் எவனா னாலும் கற்ப​னை​யே!

எங்கும் இல்லா இ​றைவ​னை ஏங்கிக் காணத் ​தேடி​யே…
எங்கும் இல்லா இ​றைவ​னை ​நாடி ​கோயில் குளங்க​ளே…
​செல்லுகின்ற மானுட​மே! தீண்டும் சாவு நிற்கு​மோ?
​சொல்லுகின்ற கடவுளும் ​நேரில் காண ​தோன்று​மோ?

தேடி எங்கும் இல்லா இ​றைவ​னை ​
       தேடித் ​தேடி இருப்பதாக
நாடி நா​டெங்கிலும் நாடி கோயில்கள்
       குளங்கள் சுற்றி​யே!
வாடி வாழ்நாளில் எவனு​மே
       தெய்வம் ​​தோன்றக் கண்டதில்​லை​யே!
கோடி ​கோடி ​செத்தும்  ஒருவனும்
       திரும்ப பிறந்ததும் இல்​லை​யே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக