புதன், 20 ஆகஸ்ட், 2014

அரசே!  சாதி மதஊழல்,  அழி!

https://plus.google.com/u/0/app/basic/stream/z13rvftgsnmfsxddf22rwl1iaurdy5g4u04?cbp=146iduzj2t6rj&sview=1&cid=5&soc-app=115&soc-


உண்ணுகின்ற உணவில் அல்ல;
உடுத்துகின்ற ஆடைகளில் அல்ல;

பண்ணுகின்ற பதவியில் அல்ல;
பார்க்கின்ற பணத்தில் அல்ல;

பெண்அடிமை சமூகம்அன்ன,
தடையாய்இராசி, தலைவிதி என்று;

இன்றும்சாதி அவமானதுள்மூழ்க,
சுரண்டல்செய்திடும் பேதத்திருடரை;

துன்பம்தந்திடினும் ஒவ்வோர் நாளும்,
தெய்வமே! என்று கும்பிடுவோனே;
நீதிஅறியா ஏழை ஆவான்


[2]

குருக்களுக்கு ஒருவன்!
கோயில் வருமானத்தை...
பாதுகாக்கவோ, சுருட்டவோ; மிரட்டலுக்கு, ஒருவன்!

விதிஇது உன்னுடையது என்று!
ஊர் முழுவதும் வீதி வீதி...
பெருக்கலுக்கு ஒருவன்!
சாக்கடையுள் சாவதற்கு ஒருவன்!

பசிப்பிணியைத் திணித்து, வேலையேதும் இல்லாததால்;
கோயிகள்முன் தேங்காய்அன்ன
சிதற, பொறுக்கலுக்கு... ஒருவன்!

ஆலயங்களில், பணம்பொன்... குப்பைகளாய், நாட்டுக்குப் பயன்படாமல் சுரங்கங்களுள்; வெறுமனே இருப்பதும்... அரசே!
அறிக; சாதி மதஊழல்,  அகற்று!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக