ஞாயிறு, 18 ஜனவரி, 2015

சிதம்பர இரகசியம் என்பதாக ஓர் ஊழல்!

 
   Photo :   Firstpost


சிதம்பர இரகசியம் என்பதாக இன்றும் கதவு உடைப்
படாமல் இருந்திடுவது ஓர் ஊழல்!

அதனால் நந்தன் என்பான் ஓர் நாடாண்ட மாமன்னன்
என்பதும்;  நந்தி அவனுடைய மகாராணி என்பதும்;
தஞ்சை அவனுடைய தலைநகரம் என்பதும்; புதிர்
அவிழ்க்கப் படாத இரகசியமாயிற்று! [அந்தப்படிக்கு]

இலங்கையை சிங்கள [சிங்க இனன்] நாடு என்று
குறிப்பிடுவது ஓர் ஊழல்!

தமிழ் அன்ன, சிங்களம் என்பது தனி மொழி அல்ல 
என்பதும்; மூன்று மொழிச் சொற்களால்...
ஒருங்கிணைந்த ஆரியநாமம் என்பதும்;
மகாயாண  பெளத்தத் முதன்மை சந்யாசியால் 
[அவனும் ஆரியன்] சிதம்பர இரகசியம் அன்ன 
ஆக்கப்பட்டுள்ளது.

விஜயன் ஓர் மானுடன் அல்ல என்பதும்;மேலும்
ஆரியனும் அல்ல என்பதும்;  அவன் இலங்கை
மீது படை எடுதிடவில்லை  என்பதும்;  இலங்கைக்கு
அரசனாக ஒருநாளும் இருந்திட வில்லை என்பதும்; 

[சிங்களர்கள் என்ற தனி இனத்தை உருவாக்கிட]
காட்டு மிருகம் [சிங்கம்] ஒன்றுக்குப் பிறந்திட்டதாக்
பொய்யாய் கற்பனை செய்யப்பட்டவன்  என்பதும்;
இன்றும் இலங்கை முழுவதுமாக வாழ்பவர்கள்
[மகாயாண பெளத்த ஆரிய சந்யாசி சாதிகள் தவிர்த்து]
அனைவருமே ஆதிமுதல், தமிழர்கள்தாம் என்பதும்;

சிங்கள மொழித் தோன்றலுக்கு முன்பாக இலங்கையில் 
ஆட்சி மொழியாக வேற்று மொழி கலப்பற்று புழக்கத்தில் 
தமிழ்த்தான் அங்கே இருந்துற்றது என்பதும்; ஆயினும் 
மதங்களால் பண்டைய தமிழ் மக்கள் பிளவுப்படுத்தப்
பட்டுள்ளனர் என்பதும்; சிதம்பர இரகசியம் அன்ன 
ஆக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக