வெள்ளி, 11 ஜூலை, 2014

ஆண்டவன் எங்கே இருந்து  வந்துற்றானாம்?

Read story [Click > URL]:
https://plus.google.com/u/0/app/basic/stream/

மானுடம் எங்கே இருந்து வந்துற்றது?
பூமியில் தேர்ந்த கரு அணுக்கள்...
பிளவுப்பட வெளிப்பட்டது!
தேர்ந்த  கரு அணுக்கள்  எங்கிருந்து வந்துற்றன?
தண்ணீரில் இருந்து தோன்றிட்டன!

தண்ணீர் எங்கே இருந்து வந்துற்றது?
காற்றில் இருந்து வந்தது!
காற்று எங்கிருந்து வந்துற்றது?
பூமி சுழல நெருப்பு மலைகளின் வெப்ப ஆவிகள் குளிர பிரிந்திட்டது!

பூமி எங்கே இருந்து வந்தது?
தினகரனில் இருந்து பிய்ந்தது!
நிலவு, எங்கே இருந்து வந்தது?
நிலவும் சூரியனில் இருந்து
பிரிந்தது!
சூரியன்  எங்கிருந்து வந்துற்றது?
பிரபஞ்ச பெருவெடிப்பில் திரண்டு
தெரித்தது!

ஆண்டவன் எங்கே இருந்து
வந்துற்றானாம்?
பொய் பேசும் மானுட மனம்
கற்ப்பித்திட்டது!

மானுட மனங்களுக்குள் பொய் எங்கிருந்து வந்துற்றது?
அவாள்  மண்டை ஓடுகளுள்;
மூளை கற்பனைப் புதர்களில்...
இருந்து வளர்ந்திட்டது!

                    [2]

[காதலால் இசைந்ததும், காமத்தால் கலந்ததும்...]

என்னை  உன்னை எவனையும்
இறைவன் படைக்க வில்லையே!
பின்னை எவன்ப டைப்பிலே பிறப்பெ டுத்தோம் மண்ணிலே,
அன்னைத் தந்தை கலவியில், அவத ரித்தோம் பெண்ணிலே!,
உண்மை இதுதான் என்பவனை உலக மேதை  என்பனே!

உருவெடுத்து [உருவம் தெரிய] நேரடியாய் உயிர்படைத்து ஓர்நொடியில், கொடுத்திருந்தால், கொடுத்தவனை
ஆண்டவனே!என்றிருப்பேன்!
கருத்தரித்துப் பத்துமாதம் [நம்மை] கருவறைக்குள் வைத்திருந்து, (உயிர்ப் பிழைத்து)
உருவெடுத்துப் பெற்றவர்கள், உண்மையிலே நம்அன்னையரே!


உன்னை யார்பெற்றார் என்றால் உடனேநீ அம்மா என்பாய்;
என்னை யார்பெற்றார் என்றால் என்னையும்என் அன்னை என்பேன்;
பின்னைநீ பிதற்றுவ(து) என்ன?தெய்வமே படைத்த(து) என்று! - உன் அன்னையை [நடத்தையை] அவமதிக்கின்றாயே - நீஒரு அப்பனுக்குப் பிறந்தவன் தானே!


தந்தைச் சுரந்த விந்துவழி தாவிஎன்றன் உயிரணு,
அன்னைஅளித்த முட்டைக்கூட்டுள் ஆனந்தமாய் நுழையவே,
சொந்தமாக்கிதன் வயிற்றுள்ளே என் தொந்தரவைத் தாங்கியே,
தந்த(து) என்னைஎன்அன்னையே! ஆண்டவனே இல்லையே!


கூழொக்கும்உன் தந்தை விந்தில் குறுகுறு வெனவே நீந்திய
வாலுள்ள அணுக்களில் ஒன்று (அது உன்னுடையது),
                         வந்த கருமுட்டையைத்*  துளைக்க...
வால்குறுகி கைகால் முளைக்க-நீ பிறக்கும்விதம் பக்குவமாக,
பால்சுரந்துப் பெற்றதுஉன் அன்னை! மூளையே சொல்
கடவுள் இல்லை.

                       ( *கருமுட்டை உன் அன்னையின் உடம்பில் உருவானது. )


லிங்க விந்தில் ஆணணு     லிங்கம் போன வழியிலே,
தங்கி  வந்த முட்டையை (பெண்ணினுடையது)
தாங்கித் தாங்கி நுழையவே,
சங்க மங்க ளானதே!  சங்கமத்தா லானதே!
எங்கள் உங்கள் அங்கமே; சொல்
இயற்கை உந்துதலால்...
யாவும் நிகழ்ந்ததே!
ஆண்டவனால் இல்லையே!


காத  லால்இ  சைந்ததும்  காமத்  தால்க  லந்ததும்,
தாதடா புகுந்ததும்   தானடாபி  றந்ததும்,
ஏதடாக  டவுளும்  எதற்க  டாப்ப  டைக்கனும்,
ஓத டாஇ  றைவென்று ஒருவனும்,  இல்லை என்று...  என்றுமே!


Read more [Click > URL]:
http://m.bbc.com/news/magazine-28039513

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக