வெள்ளி, 20 மார்ச், 2015

என் கால்க்ள தொடர ஏங்குகின்றன... உன் நிழலை!



என்றன் மனது தேடிடுது உன்னை!
காதுகள் வாடுகின்றன கேட்கஉன் குரலை!
எப்போது காண்பேனோ?
இதுஎன் விழிகளின் கவலை!
கால்க்ள தொடர ஏங்குகின்றன;
உன்றன்
நிழலை! 

எத்தனை ஆண்டுகள் கடந்திட்டன! - உன்னை
என்றன் இளமைத் தழுவாமல் ஓய்ந்திட்டது!
பித்தன் கதையில்வரும் சிவகாமிபோல்
பெரும்பிழை நான்என்ன செய்தேனோ? - உன்றன்
சக்தி அனைத்தும விரயம் ஆயிற்று! - நம்காதல்
சரித்திரத்தில் என்இளமை [உனக்கு]
பயன்படமால் போயிற்று!

 
காதலைப் பதுக்கினாய் - அது
கவிதையாய்ப் பிதுங்கிற்று! - உனக்காக,
நாணத்தை ஒதுக்கினேன்! இப்போது...
ஆசைகள் மெழுகாகி சூடேறிற்று!

தீயோ உன்றன் நினைவு; நாள்தோரும் என்றன்,
தேகம் தகிக்கின்றது! - நின்றன்...
தாபத்தால் தழுவி அணைத்திட்டால்! அப்போது,
என்றன் தவிப்பு குளிர்ந்திடுமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக