சனி, 28 மார்ச், 2015

அறிவே!​ போற்று தென்னாடு ஆண்ட நாகன்நந்தன், கம்சன், இராவணன்...


   Photo:   shreya bhatt

கடவுள்என்பது விசுவஉருவ கற்பனையேஎன்று விலகாமல்,
அடகண்டது  தின்றிட ஆலயத்துள் சீரணம் ஆகாமல்;
உடலம் (கொழுப்பு) உருகுதற்கு கோயிலோ, குளமோ,
மடமோ சுற்றிவந்து;  மடஆரியன் அதைப்பக்தி என்றான்!


திடமொடு அறிவியலைப் புறக்கணித்துதினம் தெய்வம்,
மடமையில் உண்டெண்றான்; மதியால் ஆயாமலே! - உன்
உட​மையாய் மதத்​தை நம்பநீ, அவனுக்கு அடி​மையானாய்!

அறிவே​! போற்று தென்னாடு ஆண்ட நாகன்நந்தன், கம்சன்,
இராவணன், ஏககலைஅவன், (இ)ரண்யன்,  நரஅசுரன்,
புத்தன்அ சோகன், புகழ்அரசி-ரசியா, ஒள​வை,வள்ளுவர்,
சித்தர்,பின் ​அம்​பேத்கர், ​பெரியார், ஒருசேர சேர்த்து!

அன்று கவிஞர்களும், அரசர்களும், 

     வனமுனிவர், அனுமன்குரங்கும்,
இன்றும் மறையாபி சாசுகளும், 

     ஏளனமாக ​தொங்கிடும் கண்திருட்டி
​பொம்​மைமூல அரக்கரும்,  

     காடும​லைகளில் அ​லைந்திட்ட சித்தர்களும்,
நம்முன்னாள் ​மானுட​மே! அவ்வா​ழையடி 

     வா​ழை உறவுகள் ​போற்று!
​தெய்வபுரட்டுக​ளை  விலகிஉன் வாரிசுக​ள் 

     சுதந்திரத்​தைக் காப்பாற்று!

அன்னியன் சாதி​கொள்​கை ஆராயா மல்ஏற்று,
பின்பற்றும் நாள்வ​ரை ​​​​பேசும் சுதந்திரம்,
மண்ணு​​லே உ​ழைப்​போர்க்கு எங்​கே? மட​மையால்,

கொன்றிடும் பேதவம்ச குற்றமதம் என்றுமே...
நன்குஅறிஉன் நாட்டுக்(கு) எதிரி! 


மாயன் மகளாய் மகள்மாயி ஆகியும் (கருமாரி)
பேயாய் உன்​னைப் பிரித்​தோ துவோர்கும்;
ஓயா பிணி​க​ளெலாம் ஓடநன்​மை செய்தாயாம்!
சாயாசதி சாதிகளை மாய்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக