சனி, 5 செப்டம்பர், 2015

சொல் மானுடத்துள், கடவுளும் செத்த அரசனே!


  ஓவியம் :  Pooja Patel





கோ என்றால் அரசன்! இல் என்றால் வீடு!
கோயில் என்றால் செத்திட்ட அரசனின்;
சமாதி மேடு! அது சுற்றுச்சுவரோடு...
அமைந்திட்டதனால் அரண்மனை!

தெய் என்றால் கொலை! தெய்வம் என்றால்;
கொலை செய்திட்ட செய்கின்ற மிருகம்!
மானுடத்துள் மிருகம் என்பான் யார்?

கர்ணனை வஞ்சகமாக கொலைசெய்தான் கண்ணன்!
இருவரு​மே அரசர்கள்! ​ஓதும் உன்நரசிம்மம்
கற்ப​னையாலும் மானுடம் என்றுநீ றைவாயோ?

இறை என்றால் திரை! திரை என்றால் வரி!
வரிவசூல்களை தன்ஒருவன் உடமையாக...
ஆக்கிட்ட கொள்ளையன் யாா? அரசன்!

இறை என்றால் உணவு பெண்டிர் உட்பட;
எதையும் தன்உணவாக்கிட்ட மானுடன்...
யார்? அவனும் அரசன்!

கடவம் என்றால் நாடு, கேடயம், போர்ப்படை!
ஆக, இம்மூன்று கடவங்கட்கும்... அதாவது;
நாடு, கேடயம், போர்ப்படை ஆகிய உடமைகட்கும்;
அன்றும் இன்றும் உரிமையாளன் யார் என்றால்...
ஆய்ந்து தெளிவாயே! கடவுளும் செத்த அரசனே!

இப்போது சொல்... பிறகு ஓது! மானுடத்துள்...
படைத்தோர் யார்? படைப்பவர் யார் என்றால்;
அனைவருக்கும் உண்ண தானியங்கள் காய்கனிகள்;
படைப்பதற்கு ஏர்உழுது அழுகின்ற விவசாயி! நீ
உடமைப்பெற உழைத்து மடிகின்ற தொழிலாளி!

துர்மத மலத்துள்ளே தோன்றிட்ட மிருதி கொசுக்க ளாலே;
வர்ணசாக் கடைப்பு ழுக்கள் வாழும்சாதி ஈக்களாலே;
சாதிமோதல் காலராக்கள் சமயசண்டை சீத பேதி
வீதி வீதி வேற்றுமை மலேரி யாக்கள் தோன்றிற்றே!

ஈன சாதி தோன்றவே இறந்து வாய்மைப் பட்டதே!
ஆனநீதி யாவையும் அழிந்து போக லானதே!
ஊண ஓதல் யாகத்துள்மதி ஊணமுற்ற மனிதனே!
காணநீதி நாட்டுள்ளே கருகவேணும் பேதமதஅம்சமே!

சாதி மனப்புண் ணடாச டங்கு சாமி சீழடா!
ஓதி ஏய்க்கும் உளுத்த ரிங்குபேத நோய்ப ரப்பும் ஈயடா!
நீதி நேர்மை உயிர்பெற நீயும் நானும் தானடா!
சாதி விலகி ஒன்றிவாழும் சரித்திரத்தை காணடா! 
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக